• Nov 24 2024

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த தமிழ் சிறுவன்...! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து...!

Sharmi / Mar 5th 2024, 10:48 am
image

பாக்கு நீரிணையை 13 வயதிலேயே நீந்திக் கடந்து சாதனை படைத்த ஹரிஹரன் தன்வந்த் என்ற மாணவனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க விளையாட்டுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

திருகோணமலையை பிறப்பிடமாகவும், இந்துக் கல்லூரியின் மைந்தனாகவும், தனது சிறுவயதில் புதிய சாதனை படைத்த ஈழமைந்தன் ஹரிஹரன் தன்வந்த்தின் சாதனை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

1954ம் ஆண்டு, நவரத்தினசாமியால் தொடங்கிய பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் நிகழ்வானது. 1966ல் மிகிர்சென். 1975ல் குமார் ஆனந்தன் எனும் ஆழிக்குமரன் ஆனந்தன் இப்படிப் பல வீரர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.

இதில் இந்தியாவைச் சேர்ந்த சியாமளா தேவி எனும் ஆசிரியையும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.

ஹரிஹரன் தன்வந்த் தனது 13 வயதில் மிகக்குறைந்த நேரத்தில் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்ததையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். 

உங்கள் சாதனை ஈழத்தமிழருக்கு மட்டுமல்லாது உலகத்தமிழருக்கும் பெருமை சேர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 

உங்கள் முயற்சி மென்மேலும் வளர்ச்சியடைய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக வாழ்த்துகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த தமிழ் சிறுவன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாழ்த்து. பாக்கு நீரிணையை 13 வயதிலேயே நீந்திக் கடந்து சாதனை படைத்த ஹரிஹரன் தன்வந்த் என்ற மாணவனுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க விளையாட்டுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,திருகோணமலையை பிறப்பிடமாகவும், இந்துக் கல்லூரியின் மைந்தனாகவும், தனது சிறுவயதில் புதிய சாதனை படைத்த ஈழமைந்தன் ஹரிஹரன் தன்வந்த்தின் சாதனை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறோம்.1954ம் ஆண்டு, நவரத்தினசாமியால் தொடங்கிய பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் நிகழ்வானது. 1966ல் மிகிர்சென். 1975ல் குமார் ஆனந்தன் எனும் ஆழிக்குமரன் ஆனந்தன் இப்படிப் பல வீரர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.இதில் இந்தியாவைச் சேர்ந்த சியாமளா தேவி எனும் ஆசிரியையும் தனது திறமையை நிரூபித்துள்ளார்.ஹரிஹரன் தன்வந்த் தனது 13 வயதில் மிகக்குறைந்த நேரத்தில் பாக்குநீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனை படைத்ததையிட்டு நாம் பெருமகிழ்ச்சியடைகிறோம். உங்கள் சாதனை ஈழத்தமிழருக்கு மட்டுமல்லாது உலகத்தமிழருக்கும் பெருமை சேர்க்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உங்கள் முயற்சி மென்மேலும் வளர்ச்சியடைய நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக வாழ்த்துகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement