• Sep 30 2025

சாரதியில்லாமல் திடீரென கடைக்குள் சென்ற டிராக்டர்; பதறியோடிய ஊழியர்கள்!

shanuja / Sep 27th 2025, 8:40 pm
image

சாரதி இல்லாமால் டிராக்டர் வாகனமொன்று திடீரென கடைக்குள் நுழைந்து விபத்துக்குள்ளான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


கடையொன்றின் வாசலில் சைக்கிள், மோட்டார் சைக்கள், டிராக்டர் என்பன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 


கடைக்குச் சென்ற வாடிக்கையாளர்களே தமது வாகனங்களை இவ்வாறு நிறுத்தி விட்டுக் கடைக்குச் சென்றுள்ளனர். 


அப்போது திடீரென டிராக்டர் வாகனம் தானாகவே இயங்க ஆரம்பித்தது. அதனைக் கண்ட கடையின் ஊழியர் ஒருவர் பதறியடித்து வாகனத்திற்கு அருகே சென்றுள்ளார். 


வாகனத்தை நிறுத்துவதற்கு அங்குமிங்குமாக ஓடினார். எனினும் குறித்த டிராக்டர் வாகனம் சிறிது சிறிதாக அசைந்து முன்னே நின்ற சைக்கிள், மோட்டார்சைக்கிளை இடித்து விழுத்தியது. 


பின்னர் கடையின் கண்ணாடிக்கதவை இடித்து நொருக்கிக் கொண்டு கடைக்குள் உள்ளே நுழைந்தது. 


பின்னர் அங்கிருந்த மற்றுமொரு நபர் பதறியடித்து ஓடிவந்து டிராக்டரை நிறுத்தினார். திடீரென டிராக்டர் இயங்க ஆரம்பித்ததால் சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கடை என்பனவற்றுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 


சாரதியில்லமால் டிராக்டர் கடையின் கண்ணாடியை நொருக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் அந்தக் கடையின் சிசிரிவியில் பதிவாகி  காணொளியாக வெளிவந்து வைரலாகியுள்ளது. 



காணொளியைப் பாரத்த பலரும் “கடை அழிந்தாலும், டிராக்டர் கடைக்குள் நுழைந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.” “டிராக்டர் கடைக்குள் வர வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறது,  இரக்கமற்ற சிலர் பிடிவாதம் பிடிப்பது போன்று” என்றவாறு பல கேளிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சாரதியில்லாமல் திடீரென கடைக்குள் சென்ற டிராக்டர்; பதறியோடிய ஊழியர்கள் சாரதி இல்லாமால் டிராக்டர் வாகனமொன்று திடீரென கடைக்குள் நுழைந்து விபத்துக்குள்ளான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கடையொன்றின் வாசலில் சைக்கிள், மோட்டார் சைக்கள், டிராக்டர் என்பன நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கடைக்குச் சென்ற வாடிக்கையாளர்களே தமது வாகனங்களை இவ்வாறு நிறுத்தி விட்டுக் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது திடீரென டிராக்டர் வாகனம் தானாகவே இயங்க ஆரம்பித்தது. அதனைக் கண்ட கடையின் ஊழியர் ஒருவர் பதறியடித்து வாகனத்திற்கு அருகே சென்றுள்ளார். வாகனத்தை நிறுத்துவதற்கு அங்குமிங்குமாக ஓடினார். எனினும் குறித்த டிராக்டர் வாகனம் சிறிது சிறிதாக அசைந்து முன்னே நின்ற சைக்கிள், மோட்டார்சைக்கிளை இடித்து விழுத்தியது. பின்னர் கடையின் கண்ணாடிக்கதவை இடித்து நொருக்கிக் கொண்டு கடைக்குள் உள்ளே நுழைந்தது. பின்னர் அங்கிருந்த மற்றுமொரு நபர் பதறியடித்து ஓடிவந்து டிராக்டரை நிறுத்தினார். திடீரென டிராக்டர் இயங்க ஆரம்பித்ததால் சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் கடை என்பனவற்றுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாரதியில்லமால் டிராக்டர் கடையின் கண்ணாடியை நொருக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த சம்பவம் அந்தக் கடையின் சிசிரிவியில் பதிவாகி  காணொளியாக வெளிவந்து வைரலாகியுள்ளது. காணொளியைப் பாரத்த பலரும் “கடை அழிந்தாலும், டிராக்டர் கடைக்குள் நுழைந்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.” “டிராக்டர் கடைக்குள் வர வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறது,  இரக்கமற்ற சிலர் பிடிவாதம் பிடிப்பது போன்று” என்றவாறு பல கேளிக்கையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement