• Nov 28 2024

வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி யாழிலிருந்து வவுனியா நோக்கி வாகனப் பேரணி ஆரம்பம்...!

Sharmi / Mar 16th 2024, 9:23 am
image

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி யாழிலிருந்து வவுனியா நோக்கிய  பேரணி இன்றையதினம்(16)  காலை நல்லூரிலிருந்து ஆரம்பமானது.

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரி தொடச்சியாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றையதினம் வவுனியாவிலும் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே  யாழிலிருந்து வவுனியா நோக்கி தற்போது வாகனப் பேரணி பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன் இன்று காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக எழுச்சிப் போராட்டமொன்றும் இடம்பெறவுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



வெடுக்குநாறிமலை ஆலயத்தில் கைதானவர்களை விடுவிக்க கோரி யாழிலிருந்து வவுனியா நோக்கி வாகனப் பேரணி ஆரம்பம். வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி யாழிலிருந்து வவுனியா நோக்கிய  பேரணி இன்றையதினம்(16)  காலை நல்லூரிலிருந்து ஆரம்பமானது.வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரி தொடச்சியாக பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றையதினம் வவுனியாவிலும் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.அப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே  யாழிலிருந்து வவுனியா நோக்கி தற்போது வாகனப் பேரணி பயணத்தை ஆரம்பித்துள்ளதுடன் இன்று காலை 10 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக எழுச்சிப் போராட்டமொன்றும் இடம்பெறவுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களின் ஏற்பாட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி க.சுகாஸ், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement