• May 15 2025

யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடைபயணம்!

Chithra / May 15th 2025, 3:46 pm
image

 

யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ். தாதிய கல்லூரியும் யாழ். போதனா வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய தாதியர்களின் நலனை மேன்படுத்தும் நடைபயணம் இன்று காலை 9.00 மணிக்கு யாழ். தாதிய கல்லூரியின் முன்றலில் ஆரம்பமானது.

இவ் நடைபயணமானது மணிக்கூட்டு கோபுர வீதியூடாக யாழ். பொதுநூலகம் வரை சென்று, 

அங்கிருந்து கண்டி பிரதான வீதியூடாக சென்று, பின்னர் முதலாம் குறுக்கு வீதியூடாக மீண்டும் யாழ். தாதிய கல்லூரி முன்றலில் வந்து நிறைவு பெற்றது.

இவ் நடைபயணத்தில் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி, தாதியர் பயிற்சிக் கல்லூரி அதிபர், நிர்வாகத் துறையினர், தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.


யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடைபயணம்  யாழ். தாதிய கல்லூரியின் 65வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ். தாதிய கல்லூரியும் யாழ். போதனா வைத்தியசாலையும் இணைந்து நடாத்திய தாதியர்களின் நலனை மேன்படுத்தும் நடைபயணம் இன்று காலை 9.00 மணிக்கு யாழ். தாதிய கல்லூரியின் முன்றலில் ஆரம்பமானது.இவ் நடைபயணமானது மணிக்கூட்டு கோபுர வீதியூடாக யாழ். பொதுநூலகம் வரை சென்று, அங்கிருந்து கண்டி பிரதான வீதியூடாக சென்று, பின்னர் முதலாம் குறுக்கு வீதியூடாக மீண்டும் யாழ். தாதிய கல்லூரி முன்றலில் வந்து நிறைவு பெற்றது.இவ் நடைபயணத்தில் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி, தாதியர் பயிற்சிக் கல்லூரி அதிபர், நிர்வாகத் துறையினர், தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement