• Oct 09 2024

ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணம்..!

Sharmi / Sep 10th 2024, 8:37 pm
image

Advertisement

வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.

யாழில் இருந்து வவுனியா நோக்கி இன்று(10) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து  சென்ற பெண் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த பெண் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் மரணம். வவுனியா, ஓமந்தையில் புகையிரதம் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிசார் தெரிவித்தனர்.யாழில் இருந்து வவுனியா நோக்கி இன்று(10) மாலை சென்ற புகையிரதமானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது புகையிரத தண்டவாளத்தில் நடந்து  சென்ற பெண் மீது புகையிரதம் மோதி விபத்துக்குள்ளானது.இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண் சுமார் 35-45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement