யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழர்ந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் தெற்கு, கோப்பாயைச் சேர்ந்த 79 வயதுடைய சாம்பசிவம் தங்கம்மா என்பவர் ஆவார்.
குறித்த வயோதிப பெண் கடந்த மாதம் 17ஆம் திகதி கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவித்தொகையை பெற்றுக்கொண்டு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது,
அப்பகுதியால் வந்த பெண் ஒருவர் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றபோது, அவர் இருபாலை முனிகோவில் வீதியில் தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக கோப்பாய் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழர்ந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் கோப்பாய் தெற்கு, கோப்பாயைச் சேர்ந்த 79 வயதுடைய சாம்பசிவம் தங்கம்மா என்பவர் ஆவார்.குறித்த வயோதிப பெண் கடந்த மாதம் 17ஆம் திகதி கோப்பாய் அஞ்சல் அலுவலகத்தில் உதவித்தொகையை பெற்றுக்கொண்டு வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது,அப்பகுதியால் வந்த பெண் ஒருவர் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றபோது, அவர் இருபாலை முனிகோவில் வீதியில் தவறி விழுந்துள்ளார். உடனடியாக கோப்பாய் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.