• Mar 12 2025

பெண் ஒருவர் எரித்துக் கொலை; சிக்கிய மகன், மகள்! இலங்கையில் பயங்கரம்

Chithra / Mar 12th 2025, 9:23 am
image

 

மொனராகலை மாவட்டம் தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டுள்ளார். 

உயிரிழந்தவர் கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் மண்வெட்டியால் அடித்து பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் 35 வயது மகன், 30 வயது மகள் மற்றும் 34 வயது மருமகள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் ஒருவர் எரித்துக் கொலை; சிக்கிய மகன், மகள் இலங்கையில் பயங்கரம்  மொனராகலை மாவட்டம் தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.உயிரிழந்த பெண் மண்வெட்டியால் அடித்து பின்னர் எரித்துக் கொல்லப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.கொலை தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் 35 வயது மகன், 30 வயது மகள் மற்றும் 34 வயது மருமகள் ஆகியோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.உயிரிழந்த பெண்ணின் சடலம் மொனராகலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement