• Sep 20 2024

சட்டையில் ஏசி-கோடையிலும் இனி குளுகுளு- புதிய கண்டுபிடிப்பு!samugammedia

Sharmi / Apr 4th 2023, 6:30 pm
image

Advertisement

குளிர்ச்சியாக இருக்கக்கூடிய வகையில் சட்டையில் வைத்துக் கொள்வது போன்ற புதிய ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது சோனி நிறுவனம்.

 Reon Pocket 2 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம் அதன் முந்தைய வெர்ஷனை போலவே உருவாக்கப்பட்டுள்ளது.

சோனி, சட்டையில் அணியக்கூடிய ஏர் கண்டிஷனரை கடந்த ஆண்டு ரியான் பாக்கெட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி இருந்தது.



அதன் தொடர்ச்சியாக தற்பொழுது, அதன் அடுத்த வெர்ஷனை வெளியிட்டுள்ளது.

Reon Pocket 2 என்ற புதிய மாடலின் குளிரூட்டும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், உடற்பயிற்சிகளுக்கு மிகவும் பொருத்தமானது என்றும் கூறப்படுகின்றது.

 இது கோடையில் பொதுமக்களின் தினசரி பயன்பாட்டுடன்  மற்றும் பயணத்துக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என்றும் சோனி தகவல் வழங்கியுள்ளது.

இது கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, இதையே குளிர் காலத்தில் வெப்பம் இயக்கியாகவும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

உடல் மேற்பரப்பில் தொடர்புடையதால் இதன் இயந்திர பாகங்கள் துருப்பிடிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.


சட்டையில் ஏசி-கோடையிலும் இனி குளுகுளு- புதிய கண்டுபிடிப்புsamugammedia குளிர்ச்சியாக இருக்கக்கூடிய வகையில் சட்டையில் வைத்துக் கொள்வது போன்ற புதிய ஏசியை அறிமுகப்படுத்தியுள்ளது சோனி நிறுவனம். Reon Pocket 2 என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சாதனம் அதன் முந்தைய வெர்ஷனை போலவே உருவாக்கப்பட்டுள்ளது.சோனி, சட்டையில் அணியக்கூடிய ஏர் கண்டிஷனரை கடந்த ஆண்டு ரியான் பாக்கெட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தி இருந்தது.அதன் தொடர்ச்சியாக தற்பொழுது, அதன் அடுத்த வெர்ஷனை வெளியிட்டுள்ளது. Reon Pocket 2 என்ற புதிய மாடலின் குளிரூட்டும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், உடற்பயிற்சிகளுக்கு மிகவும் பொருத்தமானது என்றும் கூறப்படுகின்றது. இது கோடையில் பொதுமக்களின் தினசரி பயன்பாட்டுடன்  மற்றும் பயணத்துக்கு பெரும் உபயோகமாக இருக்கும் என்றும் சோனி தகவல் வழங்கியுள்ளது. இது கோடைக்காலத்தில் குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, இதையே குளிர் காலத்தில் வெப்பம் இயக்கியாகவும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உடல் மேற்பரப்பில் தொடர்புடையதால் இதன் இயந்திர பாகங்கள் துருப்பிடிக்காத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement