• Feb 11 2025

மினுவாங்கொடையில் விபத்து; இரு பெண்கள் பலி - ஒருவர் கைது

Chithra / Feb 10th 2025, 11:30 am
image

 

மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்பிடமுல்ல பிரதேசத்தில் மினுவங்கொடயில் இருந்து வெயங்கொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும், பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரும் சிகிச்சைக்காக மினுவங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 30 வயதுடைய திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மினுவங்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

பின் இருக்கையில் பயணித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹமுல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண், சிகிச்சைக்காக  மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் மினுவாங்கொடை , நில்பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார். 

இதனையடுத்து, பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடையில் விபத்து; இரு பெண்கள் பலி - ஒருவர் கைது  மினுவங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்பிடமுல்ல பிரதேசத்தில் மினுவங்கொடயில் இருந்து வெயங்கொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது.விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியும், பின் இருக்கையில் அமர்ந்திருந்தவரும் சிகிச்சைக்காக மினுவங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 30 வயதுடைய திவுலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் மினுவங்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.பின் இருக்கையில் பயணித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இதேவேளை மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹமுல சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை இடம்பெற்றுள்ளது.மினுவாங்கொடை நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த பெண், சிகிச்சைக்காக  மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் மினுவாங்கொடை , நில்பனாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவர் ஆவார். இதனையடுத்து, பஸ் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement