• Nov 25 2024

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் சாதனை- திருமலை மாணவிகள் கௌரவிப்பு..!

Sharmi / Oct 9th 2024, 11:20 am
image

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்து பதக்கங்களை சுவிகரித்த திருகோணமலையைச் சேர்ந்த பாடசாலை மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்(08) மாலை இடம்பெற்றது.

இதனை திருகோணமலை பளுதூக்கல் கழகம் மற்றும் விளையாட்டுப் பாசறை ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் பதக்கங்களை சுவீகரித்த மாணவிகளும் இவர்களது சாதனைக்கு காரணமாக இருந்த பயிற்றுவிப்பாளர் உமா சுதன் உள்ளிட்டவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிரிஸ்டியன் நோயன் இம்மானுவேல் கலந்து சிறப்பித்தார்.

ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குளேந்திரகுமார்,கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் சிவராஜா, முன்னாள் பிரதிப் பணிப்பாளர், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர்,பாடசாலைகளின் அதிபர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.  

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் சாதனை- திருமலை மாணவிகள் கௌரவிப்பு. அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான பளு தூக்கல் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்து பதக்கங்களை சுவிகரித்த திருகோணமலையைச் சேர்ந்த பாடசாலை மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம்(08) மாலை இடம்பெற்றது.இதனை திருகோணமலை பளுதூக்கல் கழகம் மற்றும் விளையாட்டுப் பாசறை ஏற்பாடு செய்திருந்தது.இதன் போது தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் பதக்கங்களை சுவீகரித்த மாணவிகளும் இவர்களது சாதனைக்கு காரணமாக இருந்த பயிற்றுவிப்பாளர் உமா சுதன் உள்ளிட்டவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிரிஸ்டியன் நோயன் இம்மானுவேல் கலந்து சிறப்பித்தார்.ஏனைய அதிதிகளாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க, கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குளேந்திரகுமார்,கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் சிவராஜா, முன்னாள் பிரதிப் பணிப்பாளர், திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர்,பாடசாலைகளின் அதிபர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.  

Advertisement

Advertisement

Advertisement