• Nov 28 2024

10 ஆயிரம் மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை? பறந்த கடிதம்..!

Chithra / Jan 24th 2024, 3:08 pm
image

 

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 10,000 பேருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சுகயீன விடுமுறையை பதிவு செய்து, அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியமைக்கு விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபையில் ஊழியர்கள்  66 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ஊழியர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

10 ஆயிரம் மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை பறந்த கடிதம்.  இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 10,000 பேருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.சுகயீன விடுமுறையை பதிவு செய்து, அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியமைக்கு விளக்கமளிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.ஊழியர்களின் அளிக்கும் பதில்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மின்சார சபை பேச்சாளர் பிரதி பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார்.இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றிய குற்றச்சாட்டில் இலங்கை மின்சார சபையில் ஊழியர்கள்  66 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், ஊழியர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்  இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement