தருமபுரம் பொலிஸாரின் துரித செயற்பாட்டால் சட்டவிரோத மரக் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
A35 பிரதான வீதி ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் மரம் கடத்தப்படுவதாக தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக தருமபுரம் பொலிஸார் நேற்றையதினம் வீதி சோதனையை மேற்கொண்டவேளை பெறுமதி மிக்க 12 முதிரை மரக்குத்திகளுடன் சட்டவிரோதமாக பயணித்த சிறிய ரக லொறியை கைப்பற்றியுள்ளதுடன் லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம்(28) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.
தருமபுரம் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை: கைப்பற்றப்பட்ட முக்கிய பொருட்கள். தருமபுரம் பொலிஸாரின் துரித செயற்பாட்டால் சட்டவிரோத மரக் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,A35 பிரதான வீதி ஊடாக புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் மரம் கடத்தப்படுவதாக தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக தருமபுரம் பொலிஸார் நேற்றையதினம் வீதி சோதனையை மேற்கொண்டவேளை பெறுமதி மிக்க 12 முதிரை மரக்குத்திகளுடன் சட்டவிரோதமாக பயணித்த சிறிய ரக லொறியை கைப்பற்றியுள்ளதுடன் லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம்(28) கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம் சதுரங்க தெரிவித்துள்ளார்.