கல்முனையில் இடம்பெறும் கடலரிப்புக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் சபையினர், அம்பாறை மாவட்ட அரச அதிபர் சிந்தக்க அபேவிக்கிரமவை மாட்டச் செயலகத்தில் நேற்று (1) சந்தித்தனர். இதன்போது அவர்கள் தெரிவிக்கையில்,
கல்முனை கடற்கரைப்பகுதியில் நிலவும் கடலரிப்பு காரணமாக கடற்கரைப்பகுதிகள் முற்றாக அழிந்துள்ளதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கடலரிப்பு கடற்கரை வீதியை அண்மித்துள்ளதோடு மீனவர்கள் ஓய்வெடுக்கும் தற்காலிக தங்குமிடக்கட்டிடங்களும் அழிவுக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கடலரிப்பால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு மீன்பிடி செயற்பாடுகளுக்கான அணுகல் மற்றும் சேமிப்பு வசதிகள் அழிந்துவிட்டதாகவும், இதனால் மீனவ சமூகம் கடுமையான பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை, ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்த Groynes (கடற்கரை பாதுகாப்பு கல்லணை) திட்டம் முறையாக தொடரப்படாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதையும், அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாததையும் அரச அதிபரின் கவனத்திற்கு எடுத்துரைத்தனர்.
இதனையடுத்து இது தொடர்பில் விரைவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் வந்து பார்வையிட்டு சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக அரச அதிபர் உறுதியளித்தார்.
கல்முனை கடலரிப்புக்கு விரைவில் நடவடிக்கை - அம்பாறை அரச அதிபர் உறுதி கல்முனையில் இடம்பெறும் கடலரிப்புக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுக்கப்படும் என்று அம்பாறை மாவட்ட அரச அதிபரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் சபையினர், அம்பாறை மாவட்ட அரச அதிபர் சிந்தக்க அபேவிக்கிரமவை மாட்டச் செயலகத்தில் நேற்று (1) சந்தித்தனர். இதன்போது அவர்கள் தெரிவிக்கையில், கல்முனை கடற்கரைப்பகுதியில் நிலவும் கடலரிப்பு காரணமாக கடற்கரைப்பகுதிகள் முற்றாக அழிந்துள்ளதோடு மீனவர்களின் வாழ்வாதாரமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கடலரிப்பு கடற்கரை வீதியை அண்மித்துள்ளதோடு மீனவர்கள் ஓய்வெடுக்கும் தற்காலிக தங்குமிடக்கட்டிடங்களும் அழிவுக்குள்ளாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.கடலரிப்பால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு மீன்பிடி செயற்பாடுகளுக்கான அணுகல் மற்றும் சேமிப்பு வசதிகள் அழிந்துவிட்டதாகவும், இதனால் மீனவ சமூகம் கடுமையான பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டப்பட்டது. இதேவேளை, ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்த Groynes (கடற்கரை பாதுகாப்பு கல்லணை) திட்டம் முறையாக தொடரப்படாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதையும், அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதும் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாததையும் அரச அதிபரின் கவனத்திற்கு எடுத்துரைத்தனர். இதனையடுத்து இது தொடர்பில் விரைவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் வந்து பார்வையிட்டு சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதாக அரச அதிபர் உறுதியளித்தார்.