• Nov 28 2024

பலமான அணியாக செயற்பட்டு இரண்டுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற நடவடிக்கை-அலி சப்ரி ரஹீம் நடவடிக்கை..!

Sharmi / Oct 2nd 2024, 3:20 pm
image

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பலமான அணியாக செயற்பட்டு, புத்தளம் சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் சார்பில் இரண்டுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புத்தளத்தில் இருக்கின்ற புத்திஜீவிகள் சிறுபான்மைக் கட்சிகள், உலமாக்கள் ஒன்றிணைந்து தராசு சின்னத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

அந்த தராசு சின்னத்தின் ஊடாக தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் ஒன்றினைந்து போட்டியிட்டோம். 

அதில் நாங்கள் 56 ஆயிரம் 300 வாக்குகள் பெறப்பட்டது. ஆனால் எங்களுக்கு ஒரு ஆசனம்தான் கிடைத்தது.

இந்த வாக்குகளோடு இன்னும் 8,000 வாக்குகள் கிடைத்திருந்தால் 2 ஆசனமும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைத்திருக்கும். 

அந்த வகையில் பெரும்பாலான வாக்குகள் எடுத்து ஒரு ஆசனம் தான் கிடைத்தது. 

பொதுஜன பெரமுன ஊடாக சிறுபான்மை சார்பில் போட்டியிடாமல் ஒதுங்கிருந்தால் 2 ஆசனத்தோடு, தேசியப்பட்டியல் ஆசனமுமாக மூன்று ஆசனங்களைப் பெற்றிருக்கலாம்.

அதேபோன்று, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கட்சியின் உள்ளிட்ட பெருபான்மைக் கட்சிகளின் ஊடாக கடந்த 07 பாராளுமன்றத் தேர்தல்களில் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம்.

ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி ஊடாக போட்டியிட்டும் புத்தளத்தில் இருந்து ஒரு சிறுபான்மையினரை பெற முடியாது போனது. 

இதனால்தான் 2020 ஆம் ஆண்டு கூட்டணியின் ஊடாக ஒரு பலமான அணியாக செயற்பட்டு 30 வருடங்களுக்குப் பின்னர் எமக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொண்டோம்.

அதுபோல, இம்முறையும் பொதுத் தேர்தலில் ஒரு பலமான அணியாக செயற்பட்டு இரண்டுக்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றோம்.

தனித்து போட்டியிடுவதை விட கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணியாக களமிறங்கியதைப் போல இம்முறையும் பொதுச் சின்னத்தில் ஒரு கூட்டணியாக போட்டியிடுதற்கான கலந்துரையாடல்கள் புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியோரின் தலைமைகளில் இடம்பெற்று வருகின்றன.

அந்த கூட்டணியில் நானும் ஒருவனாக போட்டியிடுவேன்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மூவின மக்களுக்கும் அதிகமான பணிகளை ஆற்றியுள்ளேன். இதனை மக்கள் நன்கு அறிவார்கள். புத்தளத்தில் வாழும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் அதிகமாக உள்ளது. 

எனவே, இந்த முறையும் நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் எனவும் தெரிவித்தார்.

பலமான அணியாக செயற்பட்டு இரண்டுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற நடவடிக்கை-அலி சப்ரி ரஹீம் நடவடிக்கை. எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் பலமான அணியாக செயற்பட்டு, புத்தளம் சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் சார்பில் இரண்டுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தெரிவித்தார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கடந்த 2020ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் புத்தளத்தில் இருக்கின்ற புத்திஜீவிகள் சிறுபான்மைக் கட்சிகள், உலமாக்கள் ஒன்றிணைந்து தராசு சின்னத்தை அறிமுகப்படுத்தினார்கள்.அந்த தராசு சின்னத்தின் ஊடாக தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எல்லாக் கட்சிகளும் ஒன்றினைந்து போட்டியிட்டோம். அதில் நாங்கள் 56 ஆயிரம் 300 வாக்குகள் பெறப்பட்டது. ஆனால் எங்களுக்கு ஒரு ஆசனம்தான் கிடைத்தது.இந்த வாக்குகளோடு இன்னும் 8,000 வாக்குகள் கிடைத்திருந்தால் 2 ஆசனமும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமும் கிடைத்திருக்கும். அந்த வகையில் பெரும்பாலான வாக்குகள் எடுத்து ஒரு ஆசனம் தான் கிடைத்தது. பொதுஜன பெரமுன ஊடாக சிறுபான்மை சார்பில் போட்டியிடாமல் ஒதுங்கிருந்தால் 2 ஆசனத்தோடு, தேசியப்பட்டியல் ஆசனமுமாக மூன்று ஆசனங்களைப் பெற்றிருக்கலாம்.அதேபோன்று, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் கட்சியின் உள்ளிட்ட பெருபான்மைக் கட்சிகளின் ஊடாக கடந்த 07 பாராளுமன்றத் தேர்தல்களில் நாங்கள் தோல்வி அடைந்துள்ளோம்.ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி ஊடாக போட்டியிட்டும் புத்தளத்தில் இருந்து ஒரு சிறுபான்மையினரை பெற முடியாது போனது. இதனால்தான் 2020 ஆம் ஆண்டு கூட்டணியின் ஊடாக ஒரு பலமான அணியாக செயற்பட்டு 30 வருடங்களுக்குப் பின்னர் எமக்கான ஒரு பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொண்டோம்.அதுபோல, இம்முறையும் பொதுத் தேர்தலில் ஒரு பலமான அணியாக செயற்பட்டு இரண்டுக்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெறுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றோம்.தனித்து போட்டியிடுவதை விட கடந்த பொதுத் தேர்தலில் கூட்டணியாக களமிறங்கியதைப் போல இம்முறையும் பொதுச் சின்னத்தில் ஒரு கூட்டணியாக போட்டியிடுதற்கான கலந்துரையாடல்கள் புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் மாவட்ட ஜம்இய்யதுல் உலமா மற்றும் சமூக அமைப்புக்கள் ஆகியோரின் தலைமைகளில் இடம்பெற்று வருகின்றன.அந்த கூட்டணியில் நானும் ஒருவனாக போட்டியிடுவேன்.முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மூவின மக்களுக்கும் அதிகமான பணிகளை ஆற்றியுள்ளேன். இதனை மக்கள் நன்கு அறிவார்கள். புத்தளத்தில் வாழும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் அதிகமாக உள்ளது. எனவே, இந்த முறையும் நிச்சயமாக நான் வெற்றிபெறுவேன் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement