• Oct 09 2024

'சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி' யாழில் விவசாயக் கண்காட்சி ஆரம்பம்..!

Sharmi / Oct 2nd 2024, 3:06 pm
image

Advertisement

வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,”  எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி யாழ். திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று(02) காலை ஆரம்பமானது.

குறித்த கண்காட்சியினை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நாடா வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

இக் கண்காட்சியில், இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறுதானியங்கள், பயிர் உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விவசாய செயல்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், 

விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ப கொண்டு செல்வதுடன் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்கின்ற பொழுது இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ப லாபம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் விவசாய நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






'சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி' யாழில் விவசாயக் கண்காட்சி ஆரம்பம். வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,”  எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி யாழ். திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று(02) காலை ஆரம்பமானது.குறித்த கண்காட்சியினை வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நாடா வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.இக் கண்காட்சியில், இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறுதானியங்கள், பயிர் உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு வகையான விவசாய செயல்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன.இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ப கொண்டு செல்வதுடன் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்கின்ற பொழுது இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ப லாபம் கிடைப்பதற்கு வழிவகை செய்ய முயற்சி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் விவசாய நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்காட்சியினை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement