• Nov 25 2024

கிண்ணியா-குறிஞ்சாக்கேணி பாலத்தை உடனடியாக நிர்மாணிக்க நடவடிக்கை- கிழக்கு ஆளுநர் உறுதி..!

Sharmi / Nov 6th 2024, 12:24 pm
image

கிண்ணியா பிரதேச மக்களின் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலம் உடனடியாக நிர்மாணம் செய்யப்பட வேண்டியது அத்தியாவசிய தேவை எனவும் எனவே, ஜனாதிபதியிடம் பேசி, இதற்கான நிதியினை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார். 

கிண்ணியாவுக்கு இன்றையதினம் (06) காலை விஜயம் செய்து குறிஞ்சாக்கேணி பாலத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட படகு அனர்த்தத்தினால் 8 பேரை பலி கொடுத்தும், இன்று வரை இந்த பாலம் நிர்ணயிக்கப்படாமல் இருப்பது எனக்கு கவலை அளிக்கின்றது. 

இந்த மக்களின், கருத்துகளைக் கேட்கும் போது, நான் மெய்சிலிர்த்து போனேன்.

எனவேதான், இந்தப் பாலம் உடனடியாக நிர்மாணம் செய்யப்பட வேண்டும். 

அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. இதன் காரணமாகவே, ஜனாதிபதியுடன் பேசி, தேவையான நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்பதை இந்த மக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.   



கிண்ணியா-குறிஞ்சாக்கேணி பாலத்தை உடனடியாக நிர்மாணிக்க நடவடிக்கை- கிழக்கு ஆளுநர் உறுதி. கிண்ணியா பிரதேச மக்களின் கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலம் உடனடியாக நிர்மாணம் செய்யப்பட வேண்டியது அத்தியாவசிய தேவை எனவும் எனவே, ஜனாதிபதியிடம் பேசி, இதற்கான நிதியினை பெற்றுக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்தார். கிண்ணியாவுக்கு இன்றையதினம் (06) காலை விஜயம் செய்து குறிஞ்சாக்கேணி பாலத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட படகு அனர்த்தத்தினால் 8 பேரை பலி கொடுத்தும், இன்று வரை இந்த பாலம் நிர்ணயிக்கப்படாமல் இருப்பது எனக்கு கவலை அளிக்கின்றது. இந்த மக்களின், கருத்துகளைக் கேட்கும் போது, நான் மெய்சிலிர்த்து போனேன்.எனவேதான், இந்தப் பாலம் உடனடியாக நிர்மாணம் செய்யப்பட வேண்டும். அதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. இதன் காரணமாகவே, ஜனாதிபதியுடன் பேசி, தேவையான நிதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்பதை இந்த மக்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்றும் தெரிவித்தார்.   

Advertisement

Advertisement

Advertisement