• Mar 26 2025

போக்குவரத்து அபராதங்களுக்கு Govpay இல் செலுத்துவதற்கு நடவடிக்கை

Chithra / Mar 24th 2025, 3:15 pm
image

 

போக்குவரத்து அபராதங்களை Govpay இல் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு (ICTA) தெரிவித்துள்ளது.

வாகன சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பொதுமக்கள் விரைவில் Govpay மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்த முடியும் என்று தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவின் உறுப்பினர் ஹர்ஷா புரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பான அடிப்படைப் பணிகள் ICTA இனால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கோவ்பே என்பது வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் கல்விக் கட்டணங்கள் போன்ற அரசு தொடர்பான சேவைகளுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ ஆன்லைன் கட்டண தளமாகும். 

போக்குவரத்து அபராதங்களுக்கு Govpay இல் செலுத்துவதற்கு நடவடிக்கை  போக்குவரத்து அபராதங்களை Govpay இல் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு (ICTA) தெரிவித்துள்ளது.வாகன சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பொதுமக்கள் விரைவில் Govpay மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்த முடியும் என்று தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவின் உறுப்பினர் ஹர்ஷா புரசிங்க தெரிவித்தார்.இது தொடர்பான அடிப்படைப் பணிகள் ICTA இனால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கோவ்பே என்பது வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள் மற்றும் கல்விக் கட்டணங்கள் போன்ற அரசு தொடர்பான சேவைகளுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிகாரப்பூர்வ ஆன்லைன் கட்டண தளமாகும். 

Advertisement

Advertisement

Advertisement