• Mar 26 2025

நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள்

Chithra / Mar 24th 2025, 3:19 pm
image


மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.

இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.

பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி,

1. பிரான்ஸ் தூதுவராக ரெமி லம்பேர்ட்டும் (Mr. Remi Lambert)

2. பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம். கலீலும் (Mr.Ihab I.M. Khalil)

3. நேபாள தூதுவராக கலாநிதி பூர்ண பகதூர் நேபாளியும் (Dr. Purna Bahadur Nepali) நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்த புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் மூன்று புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று வெளிநாட்டுத் தூதுவர்கள் இன்று (24) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்.பிரான்ஸ், பலஸ்தீன் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்கள் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி,1. பிரான்ஸ் தூதுவராக ரெமி லம்பேர்ட்டும் (Mr. Remi Lambert)2. பலஸ்தீன தூதுவராக இஹாப் ஐ.எம். கலீலும் (Mr.Ihab I.M. Khalil)3. நேபாள தூதுவராக கலாநிதி பூர்ண பகதூர் நேபாளியும் (Dr. Purna Bahadur Nepali) நியமிக்கப்பட்டுள்ளனர்.வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement