• Mar 26 2025

அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து; இருவர் காயம்

Chithra / Mar 24th 2025, 3:31 pm
image

 

பதுளை - பண்டாரவளை வீதியில் திக்கராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து பண்டாவரளை நோக்கி அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து; இருவர் காயம்  பதுளை - பண்டாரவளை வீதியில் திக்கராவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்து இன்று திங்கட்கிழமை (24) காலை இடம்பெற்றுள்ளது.சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.பதுளையிலிருந்து பண்டாவரளை நோக்கி அரிசி மூடைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement