• Aug 10 2025

தப்பிச் செல்ல முற்பட்ட வலஸ் கட்டா பலத்த பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை!

Chithra / Aug 10th 2025, 4:16 pm
image

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வலஸ் கட்டா எனும் திலின சம்பத் உபாதைகளுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வலஸ் கட்டா, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு தப்பி செல்ல முற்பட்டுள்ளார்.


அதன்படி, நேற்று (09) இரவு 9.15 மணியளவில்,கழிப்பறைக்குச் செல்லும்போது, வலஸ் கட்டா அதிகாரிகளைத் தாக்கி மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.

இதன்போது அவரது கால்கள் உடைந்துள்ளதாகவும், ஒரு கையின் முழங்கை பகுதி உடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், காயமடைந்த சந்தேக நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.

தப்பிச் செல்ல முற்பட்ட வலஸ் கட்டா பலத்த பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வலஸ் கட்டா எனும் திலின சம்பத் உபாதைகளுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் வலஸ் கட்டா, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் விசாரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இவ்வாறு தப்பி செல்ல முற்பட்டுள்ளார்.அதன்படி, நேற்று (09) இரவு 9.15 மணியளவில்,கழிப்பறைக்குச் செல்லும்போது, வலஸ் கட்டா அதிகாரிகளைத் தாக்கி மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.இதன்போது அவரது கால்கள் உடைந்துள்ளதாகவும், ஒரு கையின் முழங்கை பகுதி உடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்நிலையில், காயமடைந்த சந்தேக நபர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

Advertisement

Advertisement