• Aug 10 2025

நாங்கள் அடித்த அடிக்கு அவர் தப்ப மாட்டார்; முல்லைத்தீவில் இராணுவத்தினர் அடாவடி! சகோதரர்கள் வாக்குமூலம்

Chithra / Aug 10th 2025, 4:15 pm
image


முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இடதுகரை இராணுவ முகாமுக்குள்  இராணுவத்தினரால் அடித்துக் கொல்லப்பட்ட குடும்பஸ்தரின் சகோதரர்கள் தற்போது அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளனர். 

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இடதுகரை இராணுவ முகாமுக்குள் இரும்புகள், தகரம் சேகரிப்பதற்காக இராணுவ சிப்பாய் ஒருவரால், கடந்த 7 ஆம் திகதி   வரவழைக்கப்பட்டதாக தெரிவித்து முகாமுக்குள் சென்ற அப்பகுதியை சேர்ந்த ஐந்து பேர் மீது இராணுவத்தினர் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார். 

நேற்றுமுன்தினம் முழுவது அவரை தேடிய உறவினர்கள் இராணுவத்திடம் அவரை பற்றிய கேள்வி எழுப்பியதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் நேற்று காலை முத்தயன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்


இதுதொடர்பில் ஆறு இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்த நிலையில் ,

3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி,   சடலம் தொடர்பான உடல் கூறு பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.

குறித்த சம்பவத்தில் முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் தந்தை, சகோதரர்கள் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையில் 

 

நாங்கள் அடித்த அடிக்கு அவர் தப்ப மாட்டார்; முல்லைத்தீவில் இராணுவத்தினர் அடாவடி சகோதரர்கள் வாக்குமூலம் முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இடதுகரை இராணுவ முகாமுக்குள்  இராணுவத்தினரால் அடித்துக் கொல்லப்பட்ட குடும்பஸ்தரின் சகோதரர்கள் தற்போது அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளனர். முல்லைத்தீவு - முத்தையன்கட்டு இடதுகரை இராணுவ முகாமுக்குள் இரும்புகள், தகரம் சேகரிப்பதற்காக இராணுவ சிப்பாய் ஒருவரால், கடந்த 7 ஆம் திகதி   வரவழைக்கப்பட்டதாக தெரிவித்து முகாமுக்குள் சென்ற அப்பகுதியை சேர்ந்த ஐந்து பேர் மீது இராணுவத்தினர் சரமாரியாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இதில் நால்வர் தப்பியோடிய நிலையில் ஒருவர் காணாமல் போயிருந்தார். நேற்றுமுன்தினம் முழுவது அவரை தேடிய உறவினர்கள் இராணுவத்திடம் அவரை பற்றிய கேள்வி எழுப்பியதுடன், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் அறிவித்திருந்தனர்.இந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் நேற்று காலை முத்தயன் கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்இதுதொடர்பில் ஆறு இராணுவ வீரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்த நிலையில் ,3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தியபோது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,   சடலம் தொடர்பான உடல் கூறு பரிசோதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது.குறித்த சம்பவத்தில் முத்தையன்கட்டில் வசிக்கும் எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் என்ற 32 வயதுடைய ஏழு மாத குழந்தையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டவராவார்.இந்நிலையில் உயிரிழந்தவரின் தந்தை, சகோதரர்கள் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையில்  

Advertisement

Advertisement

Advertisement