” தேயிலையின் தரத்தை உயர்த்தவும் விளைச்சலை அதிகரிக்கவும் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” – என்று கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.
” பெருந்தோட்டக் கைத்தொழிலை எடுத்துக்கொண்டால், இறப்பரில் நமது நாடு தற்போது பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அதனை மீண்டும் மேம்படுத்த அவசியமான திட்டங்களை வகுத்து வருகின்றோம். தேயிலையின் தரத்தை உயர்த்தவும் விளைச்சலை அதிகரிக்கவும் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கறுவா பயிர்ச்செய்கையின் அபிவிருத்திக்காக தனியானதொரு திணைக்களத்தை நிறுவியுள்ளோம்.
அது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளோம். கோப்பி பயிர்ச்செய்கை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அதனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். ” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தேயிலை தரத்தை உயர்த்த நடவடிக்கை கோப்பி குறித்தும் மீள் பார்வை.samugammedia ” தேயிலையின் தரத்தை உயர்த்தவும் விளைச்சலை அதிகரிக்கவும் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” – என்று கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார்.” பெருந்தோட்டக் கைத்தொழிலை எடுத்துக்கொண்டால், இறப்பரில் நமது நாடு தற்போது பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. அதனை மீண்டும் மேம்படுத்த அவசியமான திட்டங்களை வகுத்து வருகின்றோம். தேயிலையின் தரத்தை உயர்த்தவும் விளைச்சலை அதிகரிக்கவும் அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கறுவா பயிர்ச்செய்கையின் அபிவிருத்திக்காக தனியானதொரு திணைக்களத்தை நிறுவியுள்ளோம். அது தொடர்பில் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளோம். கோப்பி பயிர்ச்செய்கை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். அதனை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். ” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.