• Oct 30 2024

ஜனநாயக தேசிய கூட்டணியில் இணைந்தார் நடிகை தமிதா அபேரத்ன!

Chithra / Oct 22nd 2024, 7:54 am
image

Advertisement

 

நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் இணைய தீர்மானித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், 

பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாகவும், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

தமிதா அபேரத்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட எதிர்பார்த்திருந்த போதிலும் அவரது பெயர் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை.

தனது பெயர் வேட்புமனுவில் உள்வாங்கப்படாமைக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மீது அவர் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


ஜனநாயக தேசிய கூட்டணியில் இணைந்தார் நடிகை தமிதா அபேரத்ன  நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் இணைய தீர்மானித்துள்ளார்.நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னரே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார்.மேலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாகவும், தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.தமிதா அபேரத்ன எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட எதிர்பார்த்திருந்த போதிலும் அவரது பெயர் வேட்புமனுவில் குறிப்பிடப்படவில்லை.தனது பெயர் வேட்புமனுவில் உள்வாங்கப்படாமைக்கு இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே மீது அவர் குற்றம் சாட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement