2024 பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரபல நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
நடிகை தமிதா அபேரத்ன பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட கடந்த செவ்வாய்க்கிழமை வேட்பு மனுவில் கையொப்பமிட்டிருந்தார்.
இந்நிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்றவேளை வேட்பாளர் பட்டியலில் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
தமிதா அபேரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர ஆதரவாளராகவும் குரல் கொடுப்பவராகவும் இருந்து வருபவர்.
இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு வந்த பின்னரே தனது பெயர் நீக்கப்பட்டதை அறிந்து கொண்டதாக தெரியவருகின்றது.
வேட்புமனுவில் கையொப்பமிட வந்த நடிகை தமிதாவுக்கு அதிர்ச்சி; நீக்கப்பட்ட பெயர் 2024 பொதுத் தேர்தலுக்காக ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரபல நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.நடிகை தமிதா அபேரத்ன பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட கடந்த செவ்வாய்க்கிழமை வேட்பு மனுவில் கையொப்பமிட்டிருந்தார். இந்நிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்றவேளை வேட்பாளர் பட்டியலில் அவருடைய பெயர் நீக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.தமிதா அபேரத்ன, ஐக்கிய மக்கள் சக்தியின் தீவிர ஆதரவாளராகவும் குரல் கொடுப்பவராகவும் இருந்து வருபவர். இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு வந்த பின்னரே தனது பெயர் நீக்கப்பட்டதை அறிந்து கொண்டதாக தெரியவருகின்றது.