• Dec 03 2024

ரஷ்யாவில் தனது சகோதரிகளை கொலை செய்த சிறுமி

Anaath / Oct 11th 2024, 2:04 pm
image

ரஷ்யாவில் 13 வயதுச் சிறுமி ஒருவர், தனது சகோதரிகள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தபின், தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.யூரி, ஐரினா ஆகிய தம்பதியருக்கு 2, 5, 10, 13 மற்றும் 18 வயதுடைய ஐந்து பிள்ளைகள் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்களில் சிறு பிள்ளைகள் இருவரை அவர்களுடைய 13 வயது சகோதரி கவனித்துக்கொண்டிருந்திருக்கிறாள்.சம்பவ தினத்தன்று அவர்களில் 10 வயதுடைய சிறுமி வீட்டுக்கு வரும்போது, தனது 2 மற்றும் 5 வயதுடைய சகோதரிகள் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

விடயம் என்னவென்றால், அந்த நேரத்தில் அவர்களுடைய தாயும், அவரது காதலரும் காவல்துறை நிலையம் சென்றுள்ளனர். தன் காதலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பிள்ளைகளின் தாய் ஐரினா புகாரளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், குறித்த 13 வயது சிறுமி தனது தங்கைகளைக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, தகவலறிந்து பிள்ளைகளின் தாய் ஐரினா என்ன நடந்தது என அந்த 13 வயது சிறுமியிடம் கேட்க, அவள், “ஹா ஹா ஹா, நான் தான் அவர்களைக் கொன்றேன்” என குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாள்.

தன் பிள்ளைகள் கொல்லப்பட்டதை அறிந்த பிள்ளைகளின் தந்தையான யூரி, வீட்டுக்குள் சென்று பிள்ளைகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.இந்த சம்பவம் ரஷ்யாவைப் பொருத்தவரை, பல நாடுகளைப்போலவே, சந்தேக நபரான சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு, அவள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.



ரஷ்யாவில் தனது சகோதரிகளை கொலை செய்த சிறுமி ரஷ்யாவில் 13 வயதுச் சிறுமி ஒருவர், தனது சகோதரிகள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தபின், தனது தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.யூரி, ஐரினா ஆகிய தம்பதியருக்கு 2, 5, 10, 13 மற்றும் 18 வயதுடைய ஐந்து பிள்ளைகள் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில், அவர்களில் சிறு பிள்ளைகள் இருவரை அவர்களுடைய 13 வயது சகோதரி கவனித்துக்கொண்டிருந்திருக்கிறாள்.சம்பவ தினத்தன்று அவர்களில் 10 வயதுடைய சிறுமி வீட்டுக்கு வரும்போது, தனது 2 மற்றும் 5 வயதுடைய சகோதரிகள் இருவரும் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.விடயம் என்னவென்றால், அந்த நேரத்தில் அவர்களுடைய தாயும், அவரது காதலரும் காவல்துறை நிலையம் சென்றுள்ளனர். தன் காதலர் தனக்கு துரோகம் செய்துவிட்டதாக பிள்ளைகளின் தாய் ஐரினா புகாரளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், குறித்த 13 வயது சிறுமி தனது தங்கைகளைக் கொலை செய்துள்ளார். இதையடுத்து, தகவலறிந்து பிள்ளைகளின் தாய் ஐரினா என்ன நடந்தது என அந்த 13 வயது சிறுமியிடம் கேட்க, அவள், “ஹா ஹா ஹா, நான் தான் அவர்களைக் கொன்றேன்” என குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறாள்.தன் பிள்ளைகள் கொல்லப்பட்டதை அறிந்த பிள்ளைகளின் தந்தையான யூரி, வீட்டுக்குள் சென்று பிள்ளைகள் உயிரிழந்து கிடப்பதைக் கண்ட அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளார்.இந்த சம்பவம் ரஷ்யாவைப் பொருத்தவரை, பல நாடுகளைப்போலவே, சந்தேக நபரான சிறுமியின் வயதை கருத்தில் கொண்டு, அவள் மீது எந்த குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்படவில்லை.

Advertisement

Advertisement

Advertisement