• Jun 18 2025

இலங்கைக்கு வந்த நடிகை வரலட்சுமி; கட்டுநாயக்கவில் சிறப்பு வரவேற்பு

Chithra / Jun 17th 2025, 3:32 pm
image

  

இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரையிடலுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள "கேஜ் பேர்ட்" திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபல தென்னிந்திய நடிகை வரலட்சுமி சரத்குமார், கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தார்.

இந்தப் படத்தை இலங்கை திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்னம் தயாரிக்கிறார்.

சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-122 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு  நடிகை வரலட்சுமி சரத்குமார், இன்று  காலை 11.04 மணிக்கு வந்தடைந்தார்.

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் துணை இயக்குநர் ஹரேந்திர விஜேவர்தன மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் சர்வதேச திரைப்படத் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சமிந்த முனசிங்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் "சில்க் ரூட்" முனையத்தில் அவரை வரவேற்றனர்.


இலங்கைக்கு வந்த நடிகை வரலட்சுமி; கட்டுநாயக்கவில் சிறப்பு வரவேற்பு   இலங்கையில் தயாரிக்கப்பட்டு சர்வதேச திரையிடலுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ள "கேஜ் பேர்ட்" திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரபல தென்னிந்திய நடிகை வரலட்சுமி சரத்குமார், கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தார்.இந்தப் படத்தை இலங்கை திரைப்பட இயக்குனர் சந்திரன் ரத்னம் தயாரிக்கிறார்.சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-122 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு  நடிகை வரலட்சுமி சரத்குமார், இன்று  காலை 11.04 மணிக்கு வந்தடைந்தார்.இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் துணை இயக்குநர் ஹரேந்திர விஜேவர்தன மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் சர்வதேச திரைப்படத் தயாரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சமிந்த முனசிங்க ஆகியோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் "சில்க் ரூட்" முனையத்தில் அவரை வரவேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement