புதிய வற் வரி திருத்தங்களுக்கு அமைவாக மதுபானங்களுக்கு 160 மில்லியன் ரூபாய் கூடுதல் வரி வருவாயை இலங்கை மதுவரித்திணைக்களம் வசூலிக்க வேண்டியுள்ளது.
எனினும் அடுத்த மூன்று மாதங்களில் திணைக்களத்தின் பெருமளவான பணியாளர்கள் வயது வரம்பின் அடிப்படையில் ஓய்வு பெற உள்ள நிலையில் இந்த திட்ட இலக்கில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நாட்டின் மூன்று முக்கிய வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் மதுவரித்திணைக்களம் ஏற்கனவே உயர்மட்ட அதிகாரிகளுக்கான கடுமையான பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொகின்ற நிலையில் அதன் தலைவர் மற்றும் மதுவரித்திணைக்கள ஆணையாளர் உட்பட பலர் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் 60 வயது நிறைவடைந்தவுடன் பணிகளில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளனர்.
ஓய்வுப்பெறப்போகும் இந்த உயர்மட்ட பணியாளர்கள் அனைவரும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் அனைவரும் அடுத்த மூன்று மாதங்களில் ஓய்வு பெறும்போது, சமீப காலத்தில் தரவரிசையில் இருந்து பதவி உயர்வு பெற்ற எஞ்சிய புதிய உதவி ஆணையர்களால் செயற்பாடுகள் முன்கொண்டு செல்லப்பட வேண்டும். இது திணைக்களத்தின் கட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் எனவும் தெரிய வந்துள்ளன.
மதுபானங்களுக்கு கூடுதல் வரி.samugammedia புதிய வற் வரி திருத்தங்களுக்கு அமைவாக மதுபானங்களுக்கு 160 மில்லியன் ரூபாய் கூடுதல் வரி வருவாயை இலங்கை மதுவரித்திணைக்களம் வசூலிக்க வேண்டியுள்ளது.எனினும் அடுத்த மூன்று மாதங்களில் திணைக்களத்தின் பெருமளவான பணியாளர்கள் வயது வரம்பின் அடிப்படையில் ஓய்வு பெற உள்ள நிலையில் இந்த திட்ட இலக்கில் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நாட்டின் மூன்று முக்கிய வருவாய் ஈட்டும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் மதுவரித்திணைக்களம் ஏற்கனவே உயர்மட்ட அதிகாரிகளுக்கான கடுமையான பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொகின்ற நிலையில் அதன் தலைவர் மற்றும் மதுவரித்திணைக்கள ஆணையாளர் உட்பட பலர் எதிர்வரும் மார்ச் மாதத்துடன் 60 வயது நிறைவடைந்தவுடன் பணிகளில் இருந்து ஓய்வுப்பெறவுள்ளனர்.ஓய்வுப்பெறப்போகும் இந்த உயர்மட்ட பணியாளர்கள் அனைவரும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.அவர்கள் அனைவரும் அடுத்த மூன்று மாதங்களில் ஓய்வு பெறும்போது, சமீப காலத்தில் தரவரிசையில் இருந்து பதவி உயர்வு பெற்ற எஞ்சிய புதிய உதவி ஆணையர்களால் செயற்பாடுகள் முன்கொண்டு செல்லப்பட வேண்டும். இது திணைக்களத்தின் கட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும் எனவும் தெரிய வந்துள்ளன.