• Jan 22 2025

பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!

Tharmini / Jan 22nd 2025, 2:48 pm
image

பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றுவது தொடர்பில் கருத்து  மரக்கறி  வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த (16) அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் இன்று (22) வரை புதிய கட்டடத்திறக்கு மரக்கறி சந்தையை இடமாற்றம் செய்ய பருத்தத்துறை மாவட்ட நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று (22) வழக்கு இடம்பெற்றது.

குறித்த வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் தேதி வரைக்கும் மரக்கறி சந்தை வழமையான  தற்போது இயங்கி வருகின்ற இடத்தில் இயங்க முடியும்.

குறித்த வழக்கில் முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் வழக்கு தொடர்பில் இங்கு கருத்து தெரிவித்திருந்தார்.



பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு பருத்தித்துறை மரக்கறி சந்தை தொடர்பான வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை மரக்கறி சந்தையை புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றுவது தொடர்பில் கருத்து  மரக்கறி  வியாபாரிகளால் பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த (16) அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பிரகாரம் இன்று (22) வரை புதிய கட்டடத்திறக்கு மரக்கறி சந்தையை இடமாற்றம் செய்ய பருத்தத்துறை மாவட்ட நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் இன்று (22) வழக்கு இடம்பெற்றது.குறித்த வழக்கு எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் தேதி வரைக்கும் மரக்கறி சந்தை வழமையான  தற்போது இயங்கி வருகின்ற இடத்தில் இயங்க முடியும்.குறித்த வழக்கில் முன்னாள் யாழ். மாநகர சபை முதல்வரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் வழக்கு தொடர்பில் இங்கு கருத்து தெரிவித்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement