யாழ்ப்பாண பொலிசாரின் நிர்வாக ஊழல் மற்றும் பொதுமக்கள் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண விஜயத்தின் போது வட மாகாண ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.
அவர் தனது கோரிக்கையில் தெரிவித்த முக்கிய விடயங்களாவன,
யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றம் மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். வட மாகாணத்தில் இருந்து மீதி சோபையான குழுவுக்கு செல்லும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் தமிழ் மொழியில் தமது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு வசதி வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இந்தப் பிரச்சனையை தீர்க்கும் முகமாக ஜனாதிபது உடன் தலையீடு செய்து தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுக்க வேண்டும்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிசாரின் நிர்வாக ஊழல்கள் அதிகரித்துள்ள நிலையில் சட்டத்தரணிகளை ஆதாரமின்றி முகதாவணையில் கைது செய்யும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.
அது மட்டுமல்லாது பொது மக்களை கைது செய்யும்போது தகுந்த காரணங்கள் ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் அது தொடர்பில் பொலிஸ்மா ஆதிபருக்கு ஜனாதிபதி பணிபுரை விடுக்க வேண்டும்.
மேலும், இலங்கையில் உள்ள மேன்முறையீட்டு நீதி மன்றங்கள் உயர்நீதிமன்றம் களில் உள்ள நீதி அரசர்களில் தமிழ் நீதி அரசர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
இதனை நிவர்த்தி செய்ய முகமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று தமிழ் நீதியரசர்களும் உயர்நீதிமன்றத்தில் ஐந்து தமிழ் நிதியரசர்களையும் நியமிக்க வேண்டும்
இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்களை வலியுறுத்தி பதின்நான்கு பக்க அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பொலிஸாரின் நிர்வாக ஊழலுக்கு நடவடிக்கை வேண்டும். யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை.samugammedia யாழ்ப்பாண பொலிசாரின் நிர்வாக ஊழல் மற்றும் பொதுமக்கள் சட்டத்தரணிகள் மீது ஆதாரமற்ற வழக்குகள் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் தவபாலன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்தார்.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண விஜயத்தின் போது வட மாகாண ஆளுநர் இல்லத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தார்.அவர் தனது கோரிக்கையில் தெரிவித்த முக்கிய விடயங்களாவன, யாழ்ப்பாண மாவட்டத்தில் மாவட்ட நீதிமன்றம் மேல் நீதிமன்றம் மற்றும் நீதவான் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். வட மாகாணத்தில் இருந்து மீதி சோபையான குழுவுக்கு செல்லும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் தமிழ் மொழியில் தமது பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு வசதி வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.இந்தப் பிரச்சனையை தீர்க்கும் முகமாக ஜனாதிபது உடன் தலையீடு செய்து தமிழ் உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுக்க வேண்டும்.யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிசாரின் நிர்வாக ஊழல்கள் அதிகரித்துள்ள நிலையில் சட்டத்தரணிகளை ஆதாரமின்றி முகதாவணையில் கைது செய்யும் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும்.அது மட்டுமல்லாது பொது மக்களை கைது செய்யும்போது தகுந்த காரணங்கள் ஆதாரங்கள் இன்றி கைது செய்யப்படுவதை நிறுத்த வேண்டும் அது தொடர்பில் பொலிஸ்மா ஆதிபருக்கு ஜனாதிபதி பணிபுரை விடுக்க வேண்டும்.மேலும், இலங்கையில் உள்ள மேன்முறையீட்டு நீதி மன்றங்கள் உயர்நீதிமன்றம் களில் உள்ள நீதி அரசர்களில் தமிழ் நீதி அரசர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.இதனை நிவர்த்தி செய்ய முகமாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மூன்று தமிழ் நீதியரசர்களும் உயர்நீதிமன்றத்தில் ஐந்து தமிழ் நிதியரசர்களையும் நியமிக்க வேண்டும் இவ்வாறு பல்வேறுபட்ட விடயங்களை வலியுறுத்தி பதின்நான்கு பக்க அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.