• Nov 24 2024

சம்பந்தன் இறந்ததும் அதிகாரப் பகிர்வு பற்றி ஜனாதிபதி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா? - சபா.குகதாஸ் கேள்வி

Sharmi / Jul 3rd 2024, 2:36 pm
image

தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இறந்ததும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா? என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் ஜனவரிக்கு தீர்வு வரும், சுதந்திர தினத்திற்கு தீர்வு வரும் என கூறியவர் பின்னர் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தரமாட்டேன் என பாராளுமன்ற முடிவுகள் இல்லாமல் தன்னிச்சையாக அறிவித்தவர், சம்பந்தன் ஐயா இறந்ததும் அதிகாரப் பகிர்வு பற்றி பேசியுள்ளார்.

சம்பந்தன் ஐயா உயிருடன் இருக்கும் போது சர்வாதிகார போக்கில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் தர முடியாது என பகிரங்கமாக அறிவித்த ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தன் இறந்ததும் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா? அல்லது சம்பந்தனின் இறப்பிலும் அரசியலா? என்ற கேள்விதான் எழுகின்றது.

விரும்பியோ விரும்பாமலோ சிங்கள ஆட்சியாளர்களின் வாயில் இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு தான் தீர்வு என்ற உண்மை உச்சரிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

சம்பந்தன் இறந்ததும் அதிகாரப் பகிர்வு பற்றி ஜனாதிபதி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா - சபா.குகதாஸ் கேள்வி தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் இறந்ததும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.இது  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் ஜனவரிக்கு தீர்வு வரும், சுதந்திர தினத்திற்கு தீர்வு வரும் என கூறியவர் பின்னர் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பில் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தரமாட்டேன் என பாராளுமன்ற முடிவுகள் இல்லாமல் தன்னிச்சையாக அறிவித்தவர், சம்பந்தன் ஐயா இறந்ததும் அதிகாரப் பகிர்வு பற்றி பேசியுள்ளார்.சம்பந்தன் ஐயா உயிருடன் இருக்கும் போது சர்வாதிகார போக்கில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் தர முடியாது என பகிரங்கமாக அறிவித்த ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தன் இறந்ததும் அதிகாரப் பகிர்வு பற்றி பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றவா அல்லது சம்பந்தனின் இறப்பிலும் அரசியலா என்ற கேள்விதான் எழுகின்றது.விரும்பியோ விரும்பாமலோ சிங்கள ஆட்சியாளர்களின் வாயில் இந்த நாட்டில் புரையோடிப் போய் உள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு தான் தீர்வு என்ற உண்மை உச்சரிக்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement