• Apr 02 2025

மொட்டிலிருந்து யானைக்கு தாவிய மஹிந்த கஹந்தகம..!

Chithra / Jul 3rd 2024, 2:36 pm
image

  


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு நகரசபையின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இது இடம்பெற்றது.

இது தொடர்பில் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, 

கட்சி அரசியல், இனவாதம், நிறவெறி போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு, இந்த நாட்டை வெல்லமுடியாத நாடாக மாற்ற ஜனாதிபதியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று  வட கொழும்புத் தொகுதியின் வலய அமைப்பாளராக  வைத்தியர் ருக்ஷான் பெல்லன நியமிக்கப்பட்டுள்ளார்.

மொட்டிலிருந்து யானைக்கு தாவிய மஹிந்த கஹந்தகம.   ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு நகரசபையின் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளார்.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இது இடம்பெற்றது.இது தொடர்பில் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது, கட்சி அரசியல், இனவாதம், நிறவெறி போன்றவற்றை புறந்தள்ளிவிட்டு, இந்த நாட்டை வெல்லமுடியாத நாடாக மாற்ற ஜனாதிபதியுடன் அனைவரும் கைகோர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துள்ளார்.இந்நிலையில், நேற்று  வட கொழும்புத் தொகுதியின் வலய அமைப்பாளராக  வைத்தியர் ருக்ஷான் பெல்லன நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement