• Jan 14 2025

புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம்!

Chithra / Jan 13th 2025, 9:09 am
image


இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா - ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தத்தில் அந்த நாட்டின் ஹஜ் யாத்திரைக்கான பிரதியமைச்சர் அப்துல்ஃபட்டா பின் சுலைமான் மஷாட் (Abdulfattah bin Sulaiman Mashat) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹனிதும சுனில் செனவி ஆகியோரினால் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன்போது, புனித ஹஜ் யாத்திரையில் ஈடுபடுபவர்களுக்கான வசதிகள் மற்றும் யாத்திரையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கு ஒப்பந்தம் இந்த வருடத்திற்கான புனித ஹஜ் யாத்திரைக்காக 3,500 இலங்கையர்களை அனுப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.சவுதி அரேபியா - ஜெட்டாவில் உள்ள அசிலா விருந்தகத்தில் வைத்து இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த ஒப்பந்தத்தில் அந்த நாட்டின் ஹஜ் யாத்திரைக்கான பிரதியமைச்சர் அப்துல்ஃபட்டா பின் சுலைமான் மஷாட் (Abdulfattah bin Sulaiman Mashat) மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹனிதும சுனில் செனவி ஆகியோரினால் கையெழுத்திடப்பட்டுள்ளது.இதன்போது, புனித ஹஜ் யாத்திரையில் ஈடுபடுபவர்களுக்கான வசதிகள் மற்றும் யாத்திரையில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement