• Nov 28 2024

விவசாய உரம் 5000 ரூபாவிற்கு வழங்கப்படும்- இந்த மேடையில் உள்ளவர்கள் சாராயக்கடை அனுமதி பெற்றவர்களும் இல்லை - சஜித் தெரிவிப்பு!

Tamil nila / Sep 15th 2024, 7:48 pm
image

விவசாய உரம் 5000 ரூபாவிற்கு வழங்கப்படும் எனவும், இந்த மேடையில் உள்ளவர்கள் சாராயக்கடை அனுமதி பெற்றவர்களும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 உள்ளுராட்சி மன்றங்களும், 4 பிரதேச செயலகங்களும் உள்ளன. இங்குள்ள அனைவரும் இணைந்து வாக்களித்தால் பொருளாதாரத்தில் முன்னேறலாம். அதற்காக நீங்களும் முன்வர வேண்டும்.

கிளிநொச்சிக்கு நல்ல செய்தியை இன்று நான் தருகிறேன். அதை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லுங்கள்.4 பிரதேச செயக பிரிவிலும் வாழும் மக்களின் நலன் பெறும் வகையில் 104 பாடசாலைகளையும் சிமாட் பாடசாலைகளாக மாற்றவுள்ளோம். அத்துடன், சகல வைத்தியசாலைகளையும் சிமாட்ட வைத்தியசாலைகளாக மாற்றவுள்ளோம்.

புதிய தொழில்நுப்பக் கல்விறை மாணவர்களுக்கு எடுத்து செல்லவுள்ளோம். சிமாட்ட வைத்தியசாலைகள் ஊடாக அனைத்து மக்களிற்கும் நல்ல சுகாதார சேவையை முன்னெடுக்க உள்ளோம். 

நான் கடந்த காலத்தில் அதிக வீடுகளை கட்டும் பொறுப்பினை எடுத்தேன். அதனை முன்னெடுத்தேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றமையால் கோட்டாபாயவின் காலத்தில் அத்திட்டம் நிறுத்தப்பட்டது..ரணிலின் காலத்திலும் அத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.

தேர்தல் வெற்றியின் பின்னர் அனைத்து பிரதேசங்களிலும் வீடுகள் இலவசமாக முன்னெடுக்கவுள்ளேன். நிறுத்தி வைக்கப்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை பிரதானமாக செய்து முடிப்பதே எனது நோக்கமாகும்.

விவசாயிகளுக்கு 5000 ரூபாவிற்கு உரம் வழங்கப்படும். மீனவர்களுக்கும், விவசாவிளக்கும் மானிய உதவிகள் வழங்கப்படும். QR முறை மூலம் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் மானிய உதவி வழங்கப்படும். இது வடக்கிற்கு மாத்திரமல்ல. நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும்.

தகவல் தொழில்நுட்பங்களையு்ம, ஆங்கில மொழிப்புலமையையும் இளையோர் அபிவிருத்தி நிறுவனங்கள் மூலம் 4 பிரதேச செயலகத்திலும் சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனம் நிறுவப்படும்.

கைத்தொழில் உற்பத்தி நிலையங்கள் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிறுவப்படும். இதன் மூலம் ஒரு மில்லியன் தொழில் முனைவோர் இந்த திட்டத்திற்கு இங்கிருந்தும் உருவக்கப்படும்.

கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள 6400 குடும்பத்துக்கு 2028 உடன் வேலை முடிகிறது. வேலை வாய்ப்புக்களை இழக்கும் அவர்கள் எனது பொறுப்பு என இங்கு கூறிக்கொள்கின்றேன்.

வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு 24 மாதங்களிற்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை தருகின்றேன்.

வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறு குறித்த மாகாணங்களை உள்ளடக்கி சர்வதேச நன்கொடையாளர் மாநாடு முன்னெடுக்கப்படும். அதன் மூலம் வடக்கு கிழக்கு மாத்திரமல்ல நாடு முழுவதும் அபவிருத்தி முன்னெடுக்கப்படும்.

கிளிநாச்சி மக்களின எதிர்காலம் எனது பொறுப்பு என்று கூறுகின்றேன். இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூறுகின்றேன். இங்கு இந்த மேடையில் உள்ள யாரும் சாராயக் காடை ,பார் போமிட் எடுக்கவில்ல. லஞ்ச ஊழலில் தொடர்பு பட்டவர்களும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விவசாய உரம் 5000 ரூபாவிற்கு வழங்கப்படும்- இந்த மேடையில் உள்ளவர்கள் சாராயக்கடை அனுமதி பெற்றவர்களும் இல்லை - சஜித் தெரிவிப்பு விவசாய உரம் 5000 ரூபாவிற்கு வழங்கப்படும் எனவும், இந்த மேடையில் உள்ளவர்கள் சாராயக்கடை அனுமதி பெற்றவர்களும் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி மாவட்டத்தில் 3 உள்ளுராட்சி மன்றங்களும், 4 பிரதேச செயலகங்களும் உள்ளன. இங்குள்ள அனைவரும் இணைந்து வாக்களித்தால் பொருளாதாரத்தில் முன்னேறலாம். அதற்காக நீங்களும் முன்வர வேண்டும்.கிளிநொச்சிக்கு நல்ல செய்தியை இன்று நான் தருகிறேன். அதை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லுங்கள்.4 பிரதேச செயக பிரிவிலும் வாழும் மக்களின் நலன் பெறும் வகையில் 104 பாடசாலைகளையும் சிமாட் பாடசாலைகளாக மாற்றவுள்ளோம். அத்துடன், சகல வைத்தியசாலைகளையும் சிமாட்ட வைத்தியசாலைகளாக மாற்றவுள்ளோம்.புதிய தொழில்நுப்பக் கல்விறை மாணவர்களுக்கு எடுத்து செல்லவுள்ளோம். சிமாட்ட வைத்தியசாலைகள் ஊடாக அனைத்து மக்களிற்கும் நல்ல சுகாதார சேவையை முன்னெடுக்க உள்ளோம். நான் கடந்த காலத்தில் அதிக வீடுகளை கட்டும் பொறுப்பினை எடுத்தேன். அதனை முன்னெடுத்தேன். கடந்த ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றமையால் கோட்டாபாயவின் காலத்தில் அத்திட்டம் நிறுத்தப்பட்டது.ரணிலின் காலத்திலும் அத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை.தேர்தல் வெற்றியின் பின்னர் அனைத்து பிரதேசங்களிலும் வீடுகள் இலவசமாக முன்னெடுக்கவுள்ளேன். நிறுத்தி வைக்கப்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை பிரதானமாக செய்து முடிப்பதே எனது நோக்கமாகும்.விவசாயிகளுக்கு 5000 ரூபாவிற்கு உரம் வழங்கப்படும். மீனவர்களுக்கும், விவசாவிளக்கும் மானிய உதவிகள் வழங்கப்படும். QR முறை மூலம் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் மானிய உதவி வழங்கப்படும். இது வடக்கிற்கு மாத்திரமல்ல. நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும்.தகவல் தொழில்நுட்பங்களையு்ம, ஆங்கில மொழிப்புலமையையும் இளையோர் அபிவிருத்தி நிறுவனங்கள் மூலம் 4 பிரதேச செயலகத்திலும் சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனம் நிறுவப்படும்.கைத்தொழில் உற்பத்தி நிலையங்கள் 4 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நிறுவப்படும். இதன் மூலம் ஒரு மில்லியன் தொழில் முனைவோர் இந்த திட்டத்திற்கு இங்கிருந்தும் உருவக்கப்படும்.கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள 6400 குடும்பத்துக்கு 2028 உடன் வேலை முடிகிறது. வேலை வாய்ப்புக்களை இழக்கும் அவர்கள் எனது பொறுப்பு என இங்கு கூறிக்கொள்கின்றேன்.வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு 24 மாதங்களிற்கு 20 ஆயிரம் ரூபா வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தை தருகின்றேன்.வடக்கு கிழக்கில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லை. அவ்வாறு குறித்த மாகாணங்களை உள்ளடக்கி சர்வதேச நன்கொடையாளர் மாநாடு முன்னெடுக்கப்படும். அதன் மூலம் வடக்கு கிழக்கு மாத்திரமல்ல நாடு முழுவதும் அபவிருத்தி முன்னெடுக்கப்படும்.கிளிநாச்சி மக்களின எதிர்காலம் எனது பொறுப்பு என்று கூறுகின்றேன். இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூறுகின்றேன். இங்கு இந்த மேடையில் உள்ள யாரும் சாராயக் காடை ,பார் போமிட் எடுக்கவில்ல. லஞ்ச ஊழலில் தொடர்பு பட்டவர்களும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement