• Jan 11 2025

யாழில் மில்லியன் பெறுமதியான விவசாய பூச்சி கொல்லி மருந்துகள் மீட்பு..!

Sharmi / Jan 4th 2025, 8:53 am
image

யாழ்  வேலணை துறையூர் பகுதியில் பெருமளவான விவசாய பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக் கைது நடவடிக்கை நேற்றையதினம் இடம்பெற்றது.

இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட குறித்த பூச்சி கொல்லி போத்தல்களை வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்ல முற்பட்டவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த பூச்சி கொல்லிகளின் பெறுமதி 50 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


யாழில் மில்லியன் பெறுமதியான விவசாய பூச்சி கொல்லி மருந்துகள் மீட்பு. யாழ்  வேலணை துறையூர் பகுதியில் பெருமளவான விவசாய பூச்சி கொல்லி மருந்து போத்தல்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இக் கைது நடவடிக்கை நேற்றையதினம் இடம்பெற்றது.இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்ட குறித்த பூச்சி கொல்லி போத்தல்களை வாகனம் ஒன்றில் எடுத்துச் செல்ல முற்பட்டவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இந்த பூச்சி கொல்லிகளின் பெறுமதி 50 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.இதன்போது, கைது செய்யப்பட்ட நால்வரும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement