• May 20 2024

மஞ்சள் நிற நோய் தாக்கத்திற்கு உள்ளாகி அழிவடையும் வேளாண்மைச் செய்கை! விவசாயிகள் கவலை

Chithra / Jan 7th 2023, 10:45 am
image

Advertisement

மூதூர் - ஒட்டுப்புல் வெட்டை வெளியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண்மை ஒருவித மஞ்சள் நிற நோய் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

மஞ்சள் நிறமாக வேளாண்மை காணப்பட்டு பின்னர் கருகிப் போய் வேளாண்மை அழிவடைந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பல தடவைகள் எண்ணெய் விசிறியும் நோய்தாக்கம் காணப்படுவதாகவும், முன்னரைவிட தற்போது நோய் எண்ணெய்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதிக செலவிட்டும் எண்ணெய் விசிறப்பட்டும் வேளாண்மைகளுக்கு ஏற்பட்டு ஒருவித மஞ்சல்நிற நோய் குறைவடையவில்லையெனவும் மூதூர் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட்டு இந்நோய் தாக்கத்தை கண்டறிந்து உரிய தீர்வினை பெற்றுத்தருமாறும் மூதூர் - ஒட்டுப்புல் வெட்டை வேளாண்மை வெளி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மஞ்சள் நிற நோய் தாக்கத்திற்கு உள்ளாகி அழிவடையும் வேளாண்மைச் செய்கை விவசாயிகள் கவலை மூதூர் - ஒட்டுப்புல் வெட்டை வெளியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வேளாண்மை ஒருவித மஞ்சள் நிற நோய் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.மஞ்சள் நிறமாக வேளாண்மை காணப்பட்டு பின்னர் கருகிப் போய் வேளாண்மை அழிவடைந்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.பல தடவைகள் எண்ணெய் விசிறியும் நோய்தாக்கம் காணப்படுவதாகவும், முன்னரைவிட தற்போது நோய் எண்ணெய்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், அதிக செலவிட்டும் எண்ணெய் விசிறப்பட்டும் வேளாண்மைகளுக்கு ஏற்பட்டு ஒருவித மஞ்சல்நிற நோய் குறைவடையவில்லையெனவும் மூதூர் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.இதுவிடயத்தில் உரிய அதிகாரிகள் நேரடியாக வந்து பார்வையிட்டு இந்நோய் தாக்கத்தை கண்டறிந்து உரிய தீர்வினை பெற்றுத்தருமாறும் மூதூர் - ஒட்டுப்புல் வெட்டை வேளாண்மை வெளி விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement