இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மேற்கு இந்தியாவுடன் விமான இணைப்பை விரிவுபடுத்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அகமதாபாத்–கொழும்பு நேரடி விமான சேவை வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
FitsAir நிறுவனம் இந்த புதிய வழித்தடத்தில் வாரத்தில் மூன்று முறை விமான சேவைகளை இயக்கவுள்ளது. இதன்மூலம், இடைநிறுத்தங்களுடன் சுமார் 9 மணி நேரமாக இருந்த பயண நேரம், நேரடி சேவையின் மூலம் சுமார் 3 மணி நேரமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய மூல சந்தையாக திகழ்கிறது.
கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து சுமார் 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்ததாகவும், இந்த ஆண்டில் மேலும் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.
அகமதாபாத் – கொழும்பு நேரடி சேவை 19ஆம் திகதி ஆரம்பம் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மேற்கு இந்தியாவுடன் விமான இணைப்பை விரிவுபடுத்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அகமதாபாத்–கொழும்பு நேரடி விமான சேவை வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.FitsAir நிறுவனம் இந்த புதிய வழித்தடத்தில் வாரத்தில் மூன்று முறை விமான சேவைகளை இயக்கவுள்ளது. இதன்மூலம், இடைநிறுத்தங்களுடன் சுமார் 9 மணி நேரமாக இருந்த பயண நேரம், நேரடி சேவையின் மூலம் சுமார் 3 மணி நேரமாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் மிகப்பெரிய மூல சந்தையாக திகழ்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து சுமார் 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்ததாகவும், இந்த ஆண்டில் மேலும் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்தனர்.