யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து சேவையானது எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக சேவையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இச்சேவையை வழங்கி வந்த கடுகதி தொடருந்து சேவை சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30 ஆம் திகதி வரை தனது சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு நாளும் அதிகாலை 5. 30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட தொடருந்தானது முற்பகல் 11: 15 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தை வந்தடையும்.
மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து மதியம் 12. 34 இற்கு பயணத்தை ஆரம்பித்து இரவு 7.20இற்குகொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைந்து தனது பயணத்தை நிறைவு செய்கிறது.
இதேவேளை கல்கிசை வரை பயணம் செய்யும் பயணிகள் புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தின் ஊடாக தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரையான குளிரூட்டப்பட்ட கடுகதி தொடருந்து சேவையானது எதிர்வரும் 30ஆம் திகதி வரை தொடர்ச்சியாக சேவையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இச்சேவையை வழங்கி வந்த கடுகதி தொடருந்து சேவை சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைக்கு அமைவாக இம்மாதம் 30 ஆம் திகதி வரை தனது சேவையை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளது.அதன்படி, ஒவ்வொரு நாளும் அதிகாலை 5. 30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட தொடருந்தானது முற்பகல் 11: 15 மணிக்கு யாழ்ப்பாணம் தொடருந்து நிலையத்தை வந்தடையும்.மீண்டும் காங்கேசன்துறையிலிருந்து மதியம் 12. 34 இற்கு பயணத்தை ஆரம்பித்து இரவு 7.20இற்குகொழும்பு புறக்கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைந்து தனது பயணத்தை நிறைவு செய்கிறது.இதேவேளை கல்கிசை வரை பயணம் செய்யும் பயணிகள் புறக்கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து மற்றுமொரு வாகனத்தின் ஊடாக தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.