• Nov 24 2024

பயன்படுத்த முடியாத நிலையில் விமானங்கள்..! இலங்கைக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

Chithra / Jun 2nd 2024, 9:33 am
image

 

விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் சுமார் 45 வீதமான விமானங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.

கொரோனாத் தொற்று நோயின் போது அத்தியாவசிய தேவைகளை மேற்கொண்ட  விமானங்களின் பராமரிப்புக்காக செலவிடப்படும் பெரும் தொகையை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விமானப்படையின் கிங் ஏர் பி200 பீச் கிராஃப்ட் விமானம் கடல் மற்றும் நில கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றது.

மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சோதனைகளை நடத்துவதற்கும், பரந்த பகுதியை கண்காணிக்கவும் இந்த விமானம் போதுமானதாக இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமெரிக்காவினால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட King Air 360 ER ரக விமானம் ஒரு வருட உதிரி பாகங்களுடன் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும், அவுஸ்திரேலிய அரசாங்கம் கிங் ஏர் 350 ரக விமானத்தை இலங்கைக்கு வழங்கவுள்ளதுடன், ஒரு வருட உதிரி பாகங்களும் வழங்கப்படவுள்ளது.

இந்த விமானத்தின் தற்போதைய மதிப்பு பதினைந்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானங்களை பெறுவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தையும் பாதுகாப்பு அமைச்சு ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது.

பயன்படுத்த முடியாத நிலையில் விமானங்கள். இலங்கைக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்  விமானப்படைக்கு சொந்தமான விமானங்களில் சுமார் 45 வீதமான விமானங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தெரியவந்துள்ளது.கொரோனாத் தொற்று நோயின் போது அத்தியாவசிய தேவைகளை மேற்கொண்ட  விமானங்களின் பராமரிப்புக்காக செலவிடப்படும் பெரும் தொகையை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் விமானப்படையின் கிங் ஏர் பி200 பீச் கிராஃப்ட் விமானம் கடல் மற்றும் நில கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றது.மனித மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான சோதனைகளை நடத்துவதற்கும், பரந்த பகுதியை கண்காணிக்கவும் இந்த விமானம் போதுமானதாக இல்லை எனவும் தெரியவந்துள்ளது.இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக அமெரிக்காவினால் இலங்கைக்கு ஒதுக்கப்பட்ட வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட King Air 360 ER ரக விமானம் ஒரு வருட உதிரி பாகங்களுடன் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.மேலும், அவுஸ்திரேலிய அரசாங்கம் கிங் ஏர் 350 ரக விமானத்தை இலங்கைக்கு வழங்கவுள்ளதுடன், ஒரு வருட உதிரி பாகங்களும் வழங்கப்படவுள்ளது.இந்த விமானத்தின் தற்போதைய மதிப்பு பதினைந்து மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விமானங்களை பெறுவது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தையும் பாதுகாப்பு அமைச்சு ஒப்புதலுக்காக சமர்ப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement