• May 19 2024

பாடசாலையில் மது விருந்து :அரை மணி நேரத்தில் ஒரு போத்தல் பியரை காலி செய்த மாணவர்கள்!

Sharmi / Dec 28th 2022, 9:41 pm
image

Advertisement

கம்பளை நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் நான்கு மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு பின்னால், உள்ள காட்டில் காலை 9 மணியளவில் சாராயம் அருந்தி விட்டு, பீடி புகைத்துக்கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் இம்முறை உயர் தரப்பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. திங்கள் கிழமை பாடசாலை விடுமுறை நாளில் கம்பளை நகருக்கு வந்துள்ள இந்த மாணவர்கள் நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் ஒரு போத்தல் சாராயத்தை கொள்வனவு செய்துள்ளதுடன் மற்றைய கடையொன்றில் கடலை மற்றும் பீடி ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளனர்.

இதனையடுத்து கம்பளை விகுலுவத்த மைதானத்திற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு பின்னால் உள்ள காட்டுக்குள் சென்று மது அருந்தி உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அரை மணி நேரத்தில் சாராய போத்தை காலி செய்து விட்டு, பீடி புகைத்து கொண்டிருந்த போதே பொலிஸார், மாணவர்களை கைது செய்துள்ளனர்.

கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள், பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் மது விருந்து :அரை மணி நேரத்தில் ஒரு போத்தல் பியரை காலி செய்த மாணவர்கள் கம்பளை நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் நான்கு மாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு பின்னால், உள்ள காட்டில் காலை 9 மணியளவில் சாராயம் அருந்தி விட்டு, பீடி புகைத்துக்கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த மாணவர்கள் இம்முறை உயர் தரப்பரீட்சைக்கு தோற்ற உள்ளவர்கள் என தெரியவந்துள்ளது. திங்கள் கிழமை பாடசாலை விடுமுறை நாளில் கம்பளை நகருக்கு வந்துள்ள இந்த மாணவர்கள் நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் ஒரு போத்தல் சாராயத்தை கொள்வனவு செய்துள்ளதுடன் மற்றைய கடையொன்றில் கடலை மற்றும் பீடி ஆகியவற்றை கொள்வனவு செய்துள்ளனர்.இதனையடுத்து கம்பளை விகுலுவத்த மைதானத்திற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு பின்னால் உள்ள காட்டுக்குள் சென்று மது அருந்தி உள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அரை மணி நேரத்தில் சாராய போத்தை காலி செய்து விட்டு, பீடி புகைத்து கொண்டிருந்த போதே பொலிஸார், மாணவர்களை கைது செய்துள்ளனர். கம்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர்கள், பெற்றோர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement