• Nov 23 2024

ஜனாதிபதி ரணிலுக்கு முழுமையாக ஆதரவு - சற்றுமுன் அறிவித்தார் அலி சப்ரி

Chithra / Jul 30th 2024, 4:41 pm
image

 

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தொடர்ச்சியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியும் சற்றுமுன் தனது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனக் குறிப்பிட்டுள்ளார். 

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை செய்து இதனைத் தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில், 

''பொருளாதாரத்துக்கே நாம் முன்னுரிமையளிக்கின்றோம். 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் பொருளாதாரம் தோல்வியடைந்ததால், எவ்வாறு நாடு வீழ்ச்சியடைந்தது என்பதை நேரடியாக  பார்த்தோம்.

அதனை மீட்பதிலும் ஸ்திரப்படுத்துவதிலும் ஜனாதிபதி ரணில் சிறப்பான பணியை ஆற்றியுள்ளார். தற்போதைய திட்டம் செயல்படும் போது நாம் புதிய முறையில் முயற்சி செய்ய முடியாது.

வெற்றிகரமான கொள்கைகளை கடைபிடிப்பது  நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது.

எமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முழுமையாக ஆதரவளிக்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, நம் நாட்டை முதன்மைப்படுத்த வேண்டிய நேரம் இது. என அமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணிலுக்கு முழுமையாக ஆதரவு - சற்றுமுன் அறிவித்தார் அலி சப்ரி  பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் தொடர்ச்சியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியும் சற்றுமுன் தனது ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனக் குறிப்பிட்டுள்ளார். தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை செய்து இதனைத் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், ''பொருளாதாரத்துக்கே நாம் முன்னுரிமையளிக்கின்றோம். 2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் பொருளாதாரம் தோல்வியடைந்ததால், எவ்வாறு நாடு வீழ்ச்சியடைந்தது என்பதை நேரடியாக  பார்த்தோம்.அதனை மீட்பதிலும் ஸ்திரப்படுத்துவதிலும் ஜனாதிபதி ரணில் சிறப்பான பணியை ஆற்றியுள்ளார். தற்போதைய திட்டம் செயல்படும் போது நாம் புதிய முறையில் முயற்சி செய்ய முடியாது.வெற்றிகரமான கொள்கைகளை கடைபிடிப்பது  நாட்டின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது.எமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு நான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு முழுமையாக ஆதரவளிக்கிறேன்.எல்லாவற்றிற்கும் மேலாக, நம் நாட்டை முதன்மைப்படுத்த வேண்டிய நேரம் இது. என அமைச்சர் அலி சப்ரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement