நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது சட்டம் சார் தொழிலுக்குத் திரும்பியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
என்னுடைய இடத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினரான அலி சப்ரி, தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.
அவர் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரின் அரசாங்கத்தின் கீழ் நீதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்ட அதிரடி ஆட்சி மாற்றம் - பழைய தொழிலுக்குத் திரும்பினார் அலி சப்ரி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது சட்டம் சார் தொழிலுக்குத் திரும்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,என்னுடைய இடத்திற்குத் திரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கிய உறுப்பினரான அலி சப்ரி, தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார். அவர் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரின் அரசாங்கத்தின் கீழ் நீதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.