• Oct 18 2024

அனைத்து சட்டத்தரணிகளும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக முன்வாருங்கள்! சரவணபவன் அழைப்பு samugammedia

Chithra / Apr 17th 2023, 7:58 pm
image

Advertisement

அனைத்து சட்டத்தரணிகளும் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக முன்வாருங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.

யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதிக்கு அண்மையில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மனுக்கு பூசைகளைச் செய்துவிட்டு ஊடகளுக்கு கருத்துவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

நாகபூசணி அம்மனுக்கு பூசைகளைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் திரும்புகின்றோம். நாளை காலை தான் என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியவரும். 

நாளைய நீதிமன்ற நடவடிக்கையில் மக்கள் கூட்டமாக பங்கேற்க முடியாது. ஆகவே எந்தெந்த அமைப்புக்கள் உள்ளனவோ அந்த அமைப்புக்கள் சார்பிலே இருவரோ மூவரோ நீதிமன்றிற்கு வந்து தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். 

இதன் மூலம் இந்து மக்கள் சிலை இந்த இடத்திலே இருக்க வேண்டும், அகற்றக் கூடாது என்பதில்  மிக ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பது அவ்விடத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

அதற்காகத்தான் நாம் இவ்வளவு கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

இந்த இடத்தில் சிலை இருப்பதானது எந்த விதத்திலும் இடையூறாக அமையாது. வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட யாரும் இது தொடர்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையி்ல் காவற்துறையினர் ஏன் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பது புரியவில்லை.

ஆகவே இந்த நடவடிக்கைகளுக்காதரவாக அனைத்து சட்டதரணிகளும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அனைத்து அமைப்புக்கள் சார்பில் வேண்டிக் கொள்கின்றேன்.- என்றார்


அனைத்து சட்டத்தரணிகளும் நாளை நீதிமன்றத்தில் ஆஜராக முன்வாருங்கள் சரவணபவன் அழைப்பு samugammedia அனைத்து சட்டத்தரணிகளும் நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக முன்வாருங்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் அழைப்பு விடுத்துள்ளார்.யாழ். பண்ணை சுற்றுவட்டப் பகுதிக்கு அண்மையில் வைக்கப்பட்ட நாகபூசணி அம்மனுக்கு பூசைகளைச் செய்துவிட்டு ஊடகளுக்கு கருத்துவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்நாகபூசணி அம்மனுக்கு பூசைகளைச் செய்துவிட்டு மன நிம்மதியுடன் திரும்புகின்றோம். நாளை காலை தான் என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியவரும். நாளைய நீதிமன்ற நடவடிக்கையில் மக்கள் கூட்டமாக பங்கேற்க முடியாது. ஆகவே எந்தெந்த அமைப்புக்கள் உள்ளனவோ அந்த அமைப்புக்கள் சார்பிலே இருவரோ மூவரோ நீதிமன்றிற்கு வந்து தங்களுடைய ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் இந்து மக்கள் சிலை இந்த இடத்திலே இருக்க வேண்டும், அகற்றக் கூடாது என்பதில்  மிக ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பது அவ்விடத்தில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.அதற்காகத்தான் நாம் இவ்வளவு கஸ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.இந்த இடத்தில் சிலை இருப்பதானது எந்த விதத்திலும் இடையூறாக அமையாது. வீதி அபிவிருத்தி அதிகார சபை உட்பட யாரும் இது தொடர்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையி்ல் காவற்துறையினர் ஏன் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பது புரியவில்லை.ஆகவே இந்த நடவடிக்கைகளுக்காதரவாக அனைத்து சட்டதரணிகளும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அனைத்து அமைப்புக்கள் சார்பில் வேண்டிக் கொள்கின்றேன்.- என்றார்

Advertisement

Advertisement

Advertisement