• Feb 05 2025

நாட்டில் தேங்காய் சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி!

Tharmini / Feb 5th 2025, 2:07 pm
image

இலங்கையில் தேங்காய் உற்பத்தி பற்றாக்குறையின் மத்தியில் உள்ளுர் கைத்தொழில் மற்றும் நுகர்வோருக்கு ஆதரவளிக்கும் வகையில் தேங்காய் துருவல் பொருட்கள் மற்றும் உலர் தேங்காய் துண்டுகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் சட்ட விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து உடனடி இறக்குமதியை ஆராயுமாறு கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சுகளுக்கு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் விவசாயத் திணைக்களம் மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபை உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, குளிர்ந்த தேங்காய் துருவல்இ தேங்காய் 

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, குளிர்ந்த தேங்காய் துருவல், தேங்காய் (கொப்பரை அல்லாத) தேங்காய்ப்பால், பால் பவுடர் மற்றும் உலர்ந்த தேங்காய் துண்டுகளை இறக்குமதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, சந்தையை ஸ்திரப்படுத்துவதற்கும், தேங்காய் சார்ந்த தொழில்களை நிலைநிறுத்துவதற்கும் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் தேங்காய் சார்ந்த பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி இலங்கையில் தேங்காய் உற்பத்தி பற்றாக்குறையின் மத்தியில் உள்ளுர் கைத்தொழில் மற்றும் நுகர்வோருக்கு ஆதரவளிக்கும் வகையில் தேங்காய் துருவல் பொருட்கள் மற்றும் உலர் தேங்காய் துண்டுகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.மேலும் சட்ட விதிகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து உடனடி இறக்குமதியை ஆராயுமாறு கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சுகளுக்கு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அத்துடன் விவசாயத் திணைக்களம் மற்றும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபை உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, குளிர்ந்த தேங்காய் துருவல்இ தேங்காய் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்ததைத் தொடர்ந்து, குளிர்ந்த தேங்காய் துருவல், தேங்காய் (கொப்பரை அல்லாத) தேங்காய்ப்பால், பால் பவுடர் மற்றும் உலர்ந்த தேங்காய் துண்டுகளை இறக்குமதி செய்வதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இதன்படி, சந்தையை ஸ்திரப்படுத்துவதற்கும், தேங்காய் சார்ந்த தொழில்களை நிலைநிறுத்துவதற்கும் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement