• Nov 25 2024

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை அனுமதித்தமை அரசின் கோழைத்தனம்..! கம்மன்பில

Chithra / May 21st 2024, 1:20 pm
image

 

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை அனுமதித்தது இலங்கை அரசாங்கத்தின் கோழைத்தனம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளே தமிழ் மக்களினால் அங்கு நடந்தேறியது தவிர, போரில் இறந்தவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட நிகழ்வு அல்ல.

தாம் நேசித்தவர் ஒருவரை, ஒரு மத சடங்கு அல்லது சமூக நிகழ்வின் மூலம் நினைவுகூர நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை யாரும் தடுக்க முடியாது.

எனினும், இந்த நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிகழ்த்தப்பட்டமையை நிகழ்விடத்தை சுற்றியுள்ள பகுதியில் கட்டப்பட்டிருந்த சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆகவே, இந்த  நினைவு நிகழ்வுகளை  அரசாங்கம் அனுமதித்திருக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வை அனுமதித்தமை அரசின் கோழைத்தனம். கம்மன்பில  முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகளை அனுமதித்தது இலங்கை அரசாங்கத்தின் கோழைத்தனம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நிகழ்வுகளே தமிழ் மக்களினால் அங்கு நடந்தேறியது தவிர, போரில் இறந்தவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட நிகழ்வு அல்ல.தாம் நேசித்தவர் ஒருவரை, ஒரு மத சடங்கு அல்லது சமூக நிகழ்வின் மூலம் நினைவுகூர நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை யாரும் தடுக்க முடியாது.எனினும், இந்த நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக நிகழ்த்தப்பட்டமையை நிகழ்விடத்தை சுற்றியுள்ள பகுதியில் கட்டப்பட்டிருந்த சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் சுட்டிக்காட்டுகின்றன.ஆகவே, இந்த  நினைவு நிகழ்வுகளை  அரசாங்கம் அனுமதித்திருக்கக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement