• May 20 2024

கோர விபத்தில் சிக்கி சிதறுண்டது அம்புலன்ஸ்..! - நோயளர்களின் நிலை என்ன? samugammedia

Chithra / Jun 29th 2023, 7:52 am
image

Advertisement

பண்டாரவளை - பதுளை வீதியின் தோவ பிரதேசத்தில் அம்புலன்ஸ் வண்டியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் சாரதி படுகாயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

டிப்பர் ரக வாகனம் மோதியதில் அம்புலன்ஸ் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அதில் இரு நோயாளிகள் இருந்ததாகவும், எனினும் நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

அம்புலன்ஸில் இருந்த உதவி சாரதி மற்றும் உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.


தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது. தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் இருந்து இரண்டு நோயாளர்கள் பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்புலன்ஸ் சாரதியின் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


கோர விபத்தில் சிக்கி சிதறுண்டது அம்புலன்ஸ். - நோயளர்களின் நிலை என்ன samugammedia பண்டாரவளை - பதுளை வீதியின் தோவ பிரதேசத்தில் அம்புலன்ஸ் வண்டியும் டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் அம்புலன்ஸ் சாரதி படுகாயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.டிப்பர் ரக வாகனம் மோதியதில் அம்புலன்ஸ் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் அதில் இரு நோயாளிகள் இருந்ததாகவும், எனினும் நோயாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.அம்புலன்ஸில் இருந்த உதவி சாரதி மற்றும் உதவியாளரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு சொந்தமான அம்புலன்ஸ் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளது. தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் இருந்து இரண்டு நோயாளர்கள் பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அம்புலன்ஸ் சாரதியின் தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Advertisement

Advertisement

Advertisement