• May 03 2024

அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரப்பிரிப்பில் முரண்பாடு : செவ்வாய் மீண்டும் சந்திப்பு!

Tamil nila / Dec 31st 2022, 6:15 pm
image

Advertisement

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயங்களிலும், வட்டார பிரிப்பிலும் மாவட்ட எல்லை நிர்ணயக்குழுவினால் முஸ்லிங்களுக்கு அநீதி இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக இந்த  வட்டார பிரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புதிதாக எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார்.

 

தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையிலான எல்லை நிர்ணய, வட்டப்பிரிப்பு சம்பந்தமான கலந்துரையாடல் அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் இந்த விடயங்களை தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் குறித்த எல்லை நிர்ணய குழுவுக்கும் எடுத்துரைத்தார். 



முஸ்லிங்களின் பெரும்பான்மை கொண்ட  உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் உறுப்பினர்களை குறைக்கும் விதமாக மாவட்ட எல்லை நிர்ணய குழு செயற்பட்டுள்ளதாக தெரிவித்த எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர பிரதேசங்களில் குறிப்பாக சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் உள்ள வட்டார பிரிப்பின் முரண்பாடுகளை உரிய தகவல்களையும், புள்ளிவிபரங்களையும் கொண்டு தேசிய எல்லை நிர்ணய குழுவுக்கு விளக்கினார். 



அதில் ஆறாக இருந்த சாய்ந்தமருதின் வட்டாரங்கள் நான்காகவும், கல்முனையின் வட்டாரங்கள் ஆறிலிருந்து நான்காவும், மருதமுனையின் வட்டாரங்கள் நான்கிலிருந்து மூன்றாகவும் குறைக்கப்பட்ட விடயங்களை கடுமையாக ஆட்சேபித்த பாராளுமன்ற உறுப்பினர் கல்முனை நகர இரட்டை வட்டாரம் இல்லாமலாக்க விடயம் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன் ஏன் அந்த வட்டாரங்களில் குறைப்பு செய்யக்கூடாது என்பதையும் தெளிவாக அக்குழுவுக்கு முன்வைத்தார். 


முஸ்லிங்களுக்கு மாவட்ட எல்லை நிர்ணயக்குழுவினால் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை கேட்டறிந்த மஹிந்த தேசப்பிரிய ஒருவார கால அவகாசத்தில் இந்த முரண்பாடுகளை தீர்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளை பணித்தார். 


இந்த கலந்துரையாடலில் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மட்டுமே கலந்து கொண்டிருந்தமையால் மாவட்டத்தின் சகல பிரதேச முஸ்லிங்களுக்குமான வட்டார பிரிப்பின் முரண்பாடுகளை அக்குழுவினருக்கு எடுத்துரைத்தார்.


 மேலும் சம்மாந்துறை முஸ்லிம் பிரதேசத்தில் இடம்பெற்ற பாராமுகமான செயற்பாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌசாத், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹீர் ஆகியோருடன் இணைந்து எல்லைநிர்ணய குழுவினருக்கு எடுத்துரைத்தார். 


சகல விடயங்களையும் கேட்டறிந்து ஆராய்ந்த தேசிய எல்லை நிர்ணய குழுவினரும், அக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் இந்த அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகளை தீர்த்து ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அரசாங்க அதிபரை கோரியுள்ளார். 


இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த விடயங்கள் தொடர்பில் திட்ட அறிக்கை சமர்ப்பித்தவர்களை மாவட்ட எல்லைநிர்ணய குழு சந்தித்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுத்து அதில் எட்டப்படும் தீர்மானத்தை தேசிய எல்லை நிர்ணயக்குழுவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. அஸ்ரப் தாஹீர் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வட்டாரப்பிரிப்பில் முரண்பாடு : செவ்வாய் மீண்டும் சந்திப்பு அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேச உள்ளுராட்சி மன்ற எல்லை நிர்ணயங்களிலும், வட்டார பிரிப்பிலும் மாவட்ட எல்லை நிர்ணயக்குழுவினால் முஸ்லிங்களுக்கு அநீதி இடம்பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக இந்த  வட்டார பிரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் புதிதாக எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்று தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் வேண்டுகோள் விடுத்தார். தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் அம்பாறை மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்குமிடையிலான எல்லை நிர்ணய, வட்டப்பிரிப்பு சம்பந்தமான கலந்துரையாடல் அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போதே அவர் இந்த விடயங்களை தேசிய எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் குறித்த எல்லை நிர்ணய குழுவுக்கும் எடுத்துரைத்தார். முஸ்லிங்களின் பெரும்பான்மை கொண்ட  உள்ளுராட்சி மன்றங்களில் முஸ்லிம் உறுப்பினர்களை குறைக்கும் விதமாக மாவட்ட எல்லை நிர்ணய குழு செயற்பட்டுள்ளதாக தெரிவித்த எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர பிரதேசங்களில் குறிப்பாக சாய்ந்தமருது, கல்முனை, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் உள்ள வட்டார பிரிப்பின் முரண்பாடுகளை உரிய தகவல்களையும், புள்ளிவிபரங்களையும் கொண்டு தேசிய எல்லை நிர்ணய குழுவுக்கு விளக்கினார். அதில் ஆறாக இருந்த சாய்ந்தமருதின் வட்டாரங்கள் நான்காகவும், கல்முனையின் வட்டாரங்கள் ஆறிலிருந்து நான்காவும், மருதமுனையின் வட்டாரங்கள் நான்கிலிருந்து மூன்றாகவும் குறைக்கப்பட்ட விடயங்களை கடுமையாக ஆட்சேபித்த பாராளுமன்ற உறுப்பினர் கல்முனை நகர இரட்டை வட்டாரம் இல்லாமலாக்க விடயம் தொடர்பிலும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததுடன் ஏன் அந்த வட்டாரங்களில் குறைப்பு செய்யக்கூடாது என்பதையும் தெளிவாக அக்குழுவுக்கு முன்வைத்தார். முஸ்லிங்களுக்கு மாவட்ட எல்லை நிர்ணயக்குழுவினால் நிகழ்த்தப்பட்ட அநீதிகளை கேட்டறிந்த மஹிந்த தேசப்பிரிய ஒருவார கால அவகாசத்தில் இந்த முரண்பாடுகளை தீர்த்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உரிய அதிகாரிகளை பணித்தார். இந்த கலந்துரையாடலில் உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மட்டுமே கலந்து கொண்டிருந்தமையால் மாவட்டத்தின் சகல பிரதேச முஸ்லிங்களுக்குமான வட்டார பிரிப்பின் முரண்பாடுகளை அக்குழுவினருக்கு எடுத்துரைத்தார். மேலும் சம்மாந்துறை முஸ்லிம் பிரதேசத்தில் இடம்பெற்ற பாராமுகமான செயற்பாடுகளை சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌசாத், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹீர் ஆகியோருடன் இணைந்து எல்லைநிர்ணய குழுவினருக்கு எடுத்துரைத்தார். சகல விடயங்களையும் கேட்டறிந்து ஆராய்ந்த தேசிய எல்லை நிர்ணய குழுவினரும், அக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் இந்த அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகளை தீர்த்து ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க அரசாங்க அதிபரை கோரியுள்ளார். இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை குறித்த விடயங்கள் தொடர்பில் திட்ட அறிக்கை சமர்ப்பித்தவர்களை மாவட்ட எல்லைநிர்ணய குழு சந்தித்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுத்து அதில் எட்டப்படும் தீர்மானத்தை தேசிய எல்லை நிர்ணயக்குழுவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. அஸ்ரப் தாஹீர் உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement