• Dec 09 2024

இளம் குடும்பஸ்தரின் உயிரை காவு கொண்ட விபத்து...! மடுவில் அதிகாலையில் துயரம்...!

Sharmi / Jun 29th 2024, 11:12 am
image

மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜோதிநகர் இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று(29) அதிகாலை இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த விபத்தில் மன்னார் பெரியகமம்  பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த விபத்தில்  காயமடைந்த நபர்  முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார். 

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இளம் குடும்பஸ்தரின் உயிரை காவு கொண்ட விபத்து. மடுவில் அதிகாலையில் துயரம். மடு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜோதிநகர் இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று(29) அதிகாலை இடம்பெற்ற  மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.குறித்த விபத்தில் மன்னார் பெரியகமம்  பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.குறித்த விபத்தில்  காயமடைந்த நபர்  முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement