இலங்கை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருளை ஒழிக்கும் சோதனையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கைகளின் போது மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன்,
அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னிச்சையான கைதுகள், மனிதாபிமானமற்ற நடத்தை, தடுப்பு காவல் உள்ளிட்டவை அவற்றில் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை அரசியலமைப்பின் 11ஆவது சரத்தின் கீழ் சித்திரவதை, கொடூரமான, மனிதாபிமானமற்ற தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு இலங்கையில் உள்ள எந்தவொரு பிரஜைக்கும் அடிப்படை உரிமை உண்டு என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.
இதேவேளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 42 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
நால்வரின் சட்ட விரோத சொத்துகள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 28 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
யுக்திய என்ற போர்வையில் மக்களை துன்புறுத்தும் நடவடிக்கை. மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த எச்சரிக்கை இலங்கை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருளை ஒழிக்கும் சோதனையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.ஆணைக்குழு அறிக்கையொன்றை விடுத்து இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.தேடுதல் நடவடிக்கைகளின் போது மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தன்னிச்சையான கைதுகள், மனிதாபிமானமற்ற நடத்தை, தடுப்பு காவல் உள்ளிட்டவை அவற்றில் அடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது.இலங்கை அரசியலமைப்பின் 11ஆவது சரத்தின் கீழ் சித்திரவதை, கொடூரமான, மனிதாபிமானமற்ற தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு இலங்கையில் உள்ள எந்தவொரு பிரஜைக்கும் அடிப்படை உரிமை உண்டு என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.இதேவேளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் 950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 42 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.நால்வரின் சட்ட விரோத சொத்துகள் தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அத்துடன், கைதானவர்களில் போதைப்பொருட்களுக்கு அடிமையான 28 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.