• Jan 23 2025

பணத்தால் வந்த வாக்குவாதம்; அண்ணனை கொலை செய்துவிட்டுதப்பியோடிய தம்பி! மட்டக்களப்பில் பயங்கரம்

Chithra / Jan 22nd 2025, 1:10 pm
image


மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் சகோதரரால் குடும்பஸ்த்தர் ஒருவர்  கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இச் சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சாதூலிய பாடசாலை வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த, சீனிமுஹம்மது முசாமில் என்ற 43 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சகோதரனான தம்பி, உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று  பணம் தருமாறு கேட்டதாகவும்,

அதற்கு அவர்  மறுப்பு தெரிவித்தபோது இடம்பெற்ற வாக்குவாதத்தினால் கோபம் கொண்ட தம்பி, அண்ணனை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.

தப்பி ஓடி தலைமறைவாகிய சகோதரனை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.


சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

பணத்தால் வந்த வாக்குவாதம்; அண்ணனை கொலை செய்துவிட்டுதப்பியோடிய தம்பி மட்டக்களப்பில் பயங்கரம் மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பிறைந்துறைச்சேனையில் சகோதரரால் குடும்பஸ்த்தர் ஒருவர்  கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.இச் சம்பவமானது இன்று காலை இடம்பெற்றுள்ளது.சாதூலிய பாடசாலை வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த, சீனிமுஹம்மது முசாமில் என்ற 43 வயதுடையவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.சகோதரனான தம்பி, உயிரிழந்தவரின் வீட்டிற்கு சென்று  பணம் தருமாறு கேட்டதாகவும்,அதற்கு அவர்  மறுப்பு தெரிவித்தபோது இடம்பெற்ற வாக்குவாதத்தினால் கோபம் கொண்ட தம்பி, அண்ணனை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றதாக பொலிசார் தெரிவித்தனர்.தப்பி ஓடி தலைமறைவாகிய சகோதரனை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement