• Feb 20 2025

கட்டார் ஓபன் பட்டத்தை வென்ற அனிசிமோவா!

Tharmini / Feb 16th 2025, 2:08 pm
image

கட்டார் ஓபனின் இறுதிப் போட்டியில் ஜெலினா ஒஸ்டாபென்கோவை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் அமண்டா அனிசிமோவா (Amanda Anisimova) தனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய பட்டத்தை வென்றார்.

உலகத் தரவரிசையில் 41 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா, இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மிகக் குறைந்த தரவரிசை வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இது 2022 ஜனவரிக்கு பின்னர் அனிசிமோவா வெற்றி கொள்ளும் முதல் பட்டமாகும்.

2023 ஆம் ஆண்டு தரவரிசையில் 359 ஆவது இடத்தில் இருந்த அவர் சோர்வு மற்றும் மனநலம் காரணமாக விளையாட்டிலிருந்து ஓய்வு எடுத்தார். ஆனால் 23 வயதான அவர் மீண்டு வந்ததில் இருந்து தனது அதீத திறனை வெளிப்படுத்தி வருகிறார்.

தரவரிசையில் 18 ஆவது இடத்திற்கும் முன்னேற உள்ளார். இது சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் அவர் வரும் முதல் தருணமாகும்.

அனிசிமோவா 2002 இல் மோனிகா செலஸைத் தொடர்ந்து கட்டார் ஓபன் பட்டத்தை வென்ற இரண்டாவது அமெரிக்கர் ஆவார். அதேநேரத்தில், லாத்வியாவின் ஓஸ்டாபென்கோ இப்போது இரண்டாவது முறையாக தோஹாவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

2016 இறுதிப் போட்டியிலும் அவர் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்டார் ஓபன் பட்டத்தை வென்ற அனிசிமோவா கட்டார் ஓபனின் இறுதிப் போட்டியில் ஜெலினா ஒஸ்டாபென்கோவை 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் அமண்டா அனிசிமோவா (Amanda Anisimova) தனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய பட்டத்தை வென்றார்.உலகத் தரவரிசையில் 41 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை அனிசிமோவா, இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற மிகக் குறைந்த தரவரிசை வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். இது 2022 ஜனவரிக்கு பின்னர் அனிசிமோவா வெற்றி கொள்ளும் முதல் பட்டமாகும்.2023 ஆம் ஆண்டு தரவரிசையில் 359 ஆவது இடத்தில் இருந்த அவர் சோர்வு மற்றும் மனநலம் காரணமாக விளையாட்டிலிருந்து ஓய்வு எடுத்தார். ஆனால் 23 வயதான அவர் மீண்டு வந்ததில் இருந்து தனது அதீத திறனை வெளிப்படுத்தி வருகிறார்.தரவரிசையில் 18 ஆவது இடத்திற்கும் முன்னேற உள்ளார். இது சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில் முதல் 20 இடங்களுக்குள் அவர் வரும் முதல் தருணமாகும்.அனிசிமோவா 2002 இல் மோனிகா செலஸைத் தொடர்ந்து கட்டார் ஓபன் பட்டத்தை வென்ற இரண்டாவது அமெரிக்கர் ஆவார். அதேநேரத்தில், லாத்வியாவின் ஓஸ்டாபென்கோ இப்போது இரண்டாவது முறையாக தோஹாவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.2016 இறுதிப் போட்டியிலும் அவர் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement